'கொரோனா லீவுக்கு வந்த பையன் இப்போ தானே போனான்'... 'நண்பனிடம் இருந்து வந்த செல்போன் அழைப்பு'... நொறுங்கி போன பெற்றோர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகாலம் சில நேரங்களில் எவ்வளவு மோசமான துயரங்களை வழங்கி விடுகிறது என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது இந்த சம்பவம்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர் பன்யம் அகில். 19 வயது இளைஞரான இவர் கனடா நாட்டில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வருகிறார். தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த மார்ச் மாதம் இவர் ஹைதராபாத் திரும்பியுள்ளார். தனது பெற்றோருடன் நேரத்தைச் செலவிட்ட அகில், தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த மாதம் மீண்டும் கனடாவிற்குத் திரும்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் கனடாவில் இருக்கும் அகிலின் நண்பனிடம் இருந்து அவரின் பெற்றோருக்கு தொலைப்பேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் வந்த செய்தியைக் கேட்ட அகிலின் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அதில் பேசிய அகிலின் நண்பர், ''உங்களது மகன் 27வது மாடியில் உள்ள வீட்டின் பால்கனியில் நின்று கொண்டு மொபைலில் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்து விட்டார்'' என்று கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் நவம்பர் 8ம் தேதி நடந்த நிலையில், அகிலின் உடலை இந்தியா கொண்டு வர அரசின் உதவியை அவரது குடும்பத்தினர் நாடியுள்ளார்கள். கடந்த மாதம் பெற்றோருடன் நேரம் செலவிட்டுச் சென்ற மகன், இந்த மாதம் இறந்து விட்டான் என்ற நிலையை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவரது குடும்பம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
Sorry for your loss brother, Will do our best @KTRoffice please assist https://t.co/SjolFc0jlH
— KTR (@KTRTRS) November 8, 2020
மற்ற செய்திகள்