‘என் மகன் இப்போ இல்லை’.. ‘போலீஸ் செஞ்சது சரிதான்’! ஆனால்...! என்கவுண்டரில் இறந்தவர்களின் குடும்பம் சொல்வதென்ன..?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டது குறித்து அவர்களது உறவினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

‘என் மகன் இப்போ இல்லை’.. ‘போலீஸ் செஞ்சது சரிதான்’! ஆனால்...! என்கவுண்டரில் இறந்தவர்களின் குடும்பம் சொல்வதென்ன..?

கடந்த 27ம் தெலுங்கானா மாநிலத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இதனை அடுத்து இன்று (06.12.2019) அதிகாலை நான்கு பேரும் சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அப்போது தப்பிக்க முயன்றதால் அவர்களை துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் என்கவுண்டர் செய்யப்பட்ட சிவா மற்றும் நவின் குடும்பத்தினர், ‘இந்த என்கவுண்டர் தொடர்பாக எங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. செய்திகள் மூலமே என்கவுண்டர் குறித்து தெரிந்து கொண்டோம். இந்த விவகாரத்தில் காவல்துறை செய்தது சரிதான். ஆனால் இதேபோல் அனைத்து பாலியல் வழக்குகளிலும் ஏன் செய்யப்படுவதில்லை?’ என தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்த என்கவுண்டரில் இறந்தவரின் தாய் ஒருவர், காவல்துறையினர் என்ன செய்தனர் என தெரியவில்லை. என் மகன் தற்போது இல்லை. என்னால் தற்போது பேசமுடியவில்லை என தெரிவித்துள்ளார். மற்றொருவரின் தாய், என்னுடைய மகன் தவறு செய்திருந்தால் அவனையும் எரித்து விடுங்கள். தவறு என்றால் தவறுதான் என தெரிவித்துள்ளார்.

 

News Credits: TheQuint

 

CRIME, ENCOUNTER, TELENGANAPOLICE, JUSTICEFORPRIYANAKAREDDY, HYDERABADPOLICE