"மொத்தமா 1000 'கிலோ'... உள்ள 'ரகசிய' அறை மாதிரி செட் பண்ணி கடத்தியிருக்காங்க..." அடுத்தடுத்து நடந்த பரபரப்பு 'சம்பவம்'!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தெலங்கானா மாநிலம்,  ரங்கா ரெட்டி மாவட்டம் ரச்சகொண்டா என்னும் பகுதியில் வைத்து கண்டெய்னர் லாரி ஒன்றை போலீசார் மடக்கி அதனுள் சோதனையிட்ட போது சுமார் 1000 கிலோ கஞ்சா சிக்கியுள்ளது.

"மொத்தமா 1000 'கிலோ'... உள்ள 'ரகசிய' அறை மாதிரி செட் பண்ணி கடத்தியிருக்காங்க..." அடுத்தடுத்து நடந்த பரபரப்பு 'சம்பவம்'!!!

மொத்தமாக 1.3 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பொருட்களை இரண்டு பேர் லாரி மூலம் ஒடிஷா மாநிலத்தில் இருந்து தெலங்கானா மாநிலம் வழியாக உத்தரப்பிரதேச மாநிலம் கொண்டு சென்ற போது சிக்கியுள்ளனர். மொத்தமாக, 1000 கிலோ கஞ்சாவை 194 பெட்டிகளில் 5.5 கிலோ அளவில் வைத்து கொண்டு செல்ல முயன்றுள்ளனர். தெலங்கானாவில் சிலருக்கும் பொருட்களை கொடுத்து விட்டு பின் உத்தரப்பிரதேச மாநிலம் கொண்டு சென்ற போது சிக்கினர். லாரி ஓட்டுநர் மற்றும் அவருடன் இருந்த நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

முன்னதாக, போதைப் பொருட்களை கண்டெய்னர் லாரி மூலம் உத்தரப்பிரதேச மாநிலம் கொண்டு செல்வதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் போலீசார் சோதனையை மேற்கொண்டனர். கண்டெய்னருக்குள் ரகசிய அறை மூலம் கடத்தியது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 1000 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரிடம் இருந்து இரண்டு மொபைல் போன்கள் மற்றும் 4000 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், இது தொடர்பாக, கஞ்சாவை சப்ளை செய்த நபரையும், அதனை வாங்க முற்பட்ட நபரையும் போலீசார் அடையாளம் கண்டுள்ள நிலையில், அவர்களை தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்