கட்டுக்கட்டா 'இவ்வளவு' பணமா...? 'மறைஞ்சு இருந்த ஒரு பீரோ...' எடுத்து 'எண்ணுறதுக்கே' ஒரு வாரம் ஆயிடும் போலையே...! - வைரலாகும் ஃபோட்டோ...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஹைதராபாத்தில் இயங்கும் பிரபல மருந்து நிறுவனம் பீரோ முழுக்க 500 ருபாய் பணத்தை அடுக்கி வைக்கப்பட்டிருந்த புகைப்படம் இணையத்தில் வெளிவந்து வைரலாகி வருகிறது.
ஹெட்ரோ மருந்து உற்பத்தி நிறுவனம், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் கொரோனா தடுப்பு மருந்துகளான ரெம்டெசிவிர், பவிபிரவிர் போன்றவற்றை உற்பத்தி செய்ய பல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, இந்நிறுவனத்தோடு ஸ்புட்னிக் தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்க ரஷ்யா நேரடி முதலீட்டு நிதியத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. ஹெட்ரோ நிறுவனம் இந்தியாவில் மட்டுமல்லாது சீனா, ரஷ்யா, எகிப்து, மெக்சிகோ மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் 25 க்கும் மேற்பட்ட மருந்து உற்பத்தி தொழிற்சாலைகளை கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த 6ம் தேதி இந்தியாவில் இருக்கும் 6 மாநிலங்களில் உள்ள பார்மா நிறுவனகளுக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது நிறுவனத்திற்கு சொந்தமான 16 வங்கி லாக்கர்கள் கண்டறியப்பட்டது.
அதோடு தனிநபரின் செலவினங்களை பார்மா நிறுவனத்தின் செலவினங்களில் சேர்த்ததும், அரசின் பதிவுக் கட்டணத்தைவிட குறைந்த கட்டணத்தில் நிலம் வாங்கியது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
மேலும், இந்திய அரசிற்கு தெரியாமல் சுமார் ரூ.550 கோடி வருவாயை ஹெட்ரோ மருந்து உற்பத்தி நிறுவனம் கணக்கில் காட்டாமல் மறைத்துள்ளது. இதுவரை கணக்கில் வராத ரூ.142.87 கோடி ரொக்கப் பணம் அந்த நிறுவனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக ஒன்றிய நேரடி வரிவிதிப்பு ஆணையம் தெரிவித்தது.
இதற்கான ஆதாரங்கள், பென் டிரைவ்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. அதோடு, மருந்து நிறுவனத்தில் மறைவாக வைக்கப்பட்டிருந்த பீரோ ஒன்றில் கோடிக்கணக்கில் 500 ரூபாய் தாள் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது
மற்ற செய்திகள்