'இந்தியாவில்'.. பிரம்மாண்டமாய் நடந்த ஓரினசேர்க்கை 'திருமணம்'!.. வைரலடித்த 'கல்யாண' ஃபோட்டோ!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் பகுதியில் இரண்டு ஆண்கள் ஓரின சேர்க்கை திருமணம் செய்து கொண்டது தொடர்பான புகைப்படங்கள் தான், தற்போது இணையதளத்தில் அதிகம் வைரலடித்து வருகிறது.

'இந்தியாவில்'.. பிரம்மாண்டமாய் நடந்த ஓரினசேர்க்கை 'திருமணம்'!.. வைரலடித்த 'கல்யாண' ஃபோட்டோ!!

இந்தியாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு வரை ஓரினசேர்க்கை என்பது, சட்டப்பிரிவு 377 ன் படி, குற்றமாக தான் இருந்தது. ஆனால், அதன்பிறகு, ஓரினசேர்க்கை குற்றமற்ற செயல் என இந்த சட்டத்தை ரத்தும் செய்து தீர்ப்பு வெளியாகியிருந்தது. இந்தியாவில், ஓரினசேர்க்கைக்கு அனுமதி இருந்தாலும், ஒரே பாலின திருமணம் இன்னும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை.

இருந்த போதும், இந்த இரண்டு ஆண்களும் தங்களது,எட்டு ஆண்டு கால உறவை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தும் 'நம்பிக்கை தரும் விழா'வாக இதனை நடத்தியுள்ளார்கள். 34 வயதான அபய் டாங்கே (Abhay Dang) மற்றும் 31 வயது சுப்ரியோ சக்ரவர்த்தி (Supriyo Chakraborty) என்ற இரண்டு பேரும் டிசம்பர் 18 ஆம் தேதி, ஹைதராபாத் புறநகரில் அமைந்துள்ள ரிசார்ட் ஒன்றில், மோதிரங்கள் மாற்றி, ஒன்றாக வாழ்வோம் என உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வின் போது, இருவருடைய குடும்பத்தினர் சுமார் 60 பேர் வரை கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினர். மிகவும் பிரம்மாண்டமான முறையில் இந்த திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.

hyderabad gay couple breaks stereotypes exchange rings

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அபய், இ காமர்ஸ் நிறுவனம் ஒன்றில் தகவல் தொழில்நுட்ப வல்லுனராக பணிபுரிந்து வருகிறார். அதே போல, கொல்கத்தாவைச் சேர்ந்த சுப்ரியோ ஹோட்டல் மேனேஜ்மன்ட் இன்ஸ்டிடியூட் ஒன்றில் நிபுணராக பணிபுரிந்து வருகிறார். பெங்காலி மற்றும் பஞ்சாபி பரம்பரியப்படி, இந்த இரு மனங்கள் ஒன்றிணையும் திருமண விழா நடைபெற்றது. ஆனால், திருமணச் சடங்குகள் மற்றும் வழக்கமான சம்பிரதாயங்கள் ஏதும் நிகழவில்லை. கையில் மருதாணி அணிந்து கொண்டும், மோதிரம் மாற்றிக் கொண்டும் திருமணம் செய்து கொண்டனர்.

hyderabad gay couple breaks stereotypes exchange rings

தங்களின் இந்த திருமண நிகழ்வு, தங்களைப் போன்ற LGBTQ உறவுகளில் இருப்பவர்களை மனம் திறந்து பேசச் செய்யும். அதே வேளையில், தங்களைப் போன்றவர்களை இந்த சமூகம் ஏற்றுக் கொள்வதற்கான முதல் படி இது என்றும், அவர்கள் தெரிவித்துள்ளனர். ஓரின சேர்க்கைக்கு இந்தியாவில் அனுமதி அளித்த போதும், அதனை இன்னும் தவறாக எண்ணும் பழக்கம் மக்களிடம் உள்ளது. அதனையும், தவறாக்கும் எண்ணத்தில் இந்த திருமணத்தை அபய் மற்றும் சுப்ரியோ செய்துள்ளார்கள்.

 

மேலும், இந்தியாவில் இன்னும் ஒரே பாலின திருமணங்கள் அங்கீகரிக்கப்படவில்லை என்னும் நிலையில், இன்னும் சில காலத்தில் தங்களது திருமணம் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படும் என நம்பிக்கையும் தெரிவிக்கிறார்கள்.

HYDERABAD, SAME SEX WEDDING, GAY COUPLE, திருமணம், ஹைதராபாத்

மற்ற செய்திகள்