1165 கிமீ தூரமா.?.. "வாரோம் சாமி சன்னிதானம்".. சபரிமலை ஐயப்பனை தரிசிக்க 33 ஆண்டுகளாக பாத யாத்திரை..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஆயிரம் கிலோமீட்டர் நடந்து சென்றுவருகிறது ஹைதராபாத்தை சேர்ந்த ஆன்மீக குழு ஒன்று.

1165 கிமீ தூரமா.?.. "வாரோம் சாமி சன்னிதானம்".. சபரிமலை ஐயப்பனை தரிசிக்க 33 ஆண்டுகளாக பாத யாத்திரை..

Also Read | விடாமுயற்சியுடன் போராடிய பார்வை மாற்றுத்திறனாளி இளைஞர்.. உதவி ஆட்சியராக தேர்வாகி அசத்தல்.!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது உலக பிரசித்திபெற்ற ஐயப்பன் திருக்கோவில். கார்த்திகை மாதம் முதல் நாள் துவங்கிய உடனேயே பக்தர்கள் சபரிமலைக்கு இருந்து சாமி தரிசனம் செய்ய துவங்குவார்கள். அந்த வகையில், இந்த ஆண்டுகளுக்கான கோவில் நடை  நேற்று (நவம்பர் 16) மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடையை மேல்சாந்தி திறந்து வைத்து தீபம் ஏற்ற, 18 ஆம் படிகள் வழியே ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்த்து திருநீறு பிரசாதமாக வழங்கப்பட்டது.

Hyderabad Devotees walk 1165 km to Sabarimala for last 33 years

இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் விரதம் இருக்க துவங்கியுள்ளனர். அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஆன்மீக குழு ஒன்று கடந்த 33 ஆண்டுகளாக நடந்தே சென்று ஐயப்பனை தரிசனம் செய்து வருகிறது.

ஹைதராபாத்தை சேர்ந்த வேணுகோபால் குருசாமியால் கடந்த 1989 ஆம் ஆண்டு சபரிமலை மகா பாதயாத்திரை குழு துவங்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் சைக்கிளிலேயே சபரிமலைக்கு சென்றுவந்த இவர் அதன்பின்னர் பக்தர்களை ஒன்றுதிரட்டி இந்த மகா பாதயாத்திரையை துவங்கியுள்ளார். தற்போது வரை ஆண்டுதோறும் இவர்களது இந்த ஆன்மீக நெடும்பயணம் தொடர்ந்து வருகிறது.

Hyderabad Devotees walk 1165 km to Sabarimala for last 33 years

அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி, தெலுங்கானா ஹரிஹரிகேசவநாதர் - பாக்யலட்சுமி கோயிலில் இருந்து சபரிமலை நோக்கிய பயணத்தை 197 பேர்கொண்ட குழு துவங்கியிருக்கிறது. குருசாமிகள் ராஜகோபால், ரமேஷ் மற்றும் சிவாஜி மஹாராஜ் ஆகியோருடன் பயணித்து வரும் இந்த குழுவினர் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை கடந்து தமிழகத்தின் ஓசூர், திண்டுக்கல், தேனி வழியாக சபரிமலைக்கு பயணித்து வருகின்றனர். கார்த்திகை மாதத்தின் முதல் வாரத்தில் ஐயப்ப தரிசனம் காணும் இவர்கள் 30 நாட்களில் 1165 கிலோமீட்டர் நடக்கின்றனர். இடையே 32 இடங்களில் தங்கி ஓய்வெடுத்து ஐயப்பனுக்கு பூஜையிட்டு பயணத்தை தொடர்கின்றனர்.

ஐயப்பன் கோவிலில் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி மண்டல  நடைபெற இருக்கிறது. அதேபோல, புகழ்பெற்ற மகர விளக்கு பூஜை சபரிமலையின் பொன்னம்பலமேட்டில் வரும் ஜனவரி 14 ஆம் தேதி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை முன்னிட்டு, சுமார் 13,500 போலீசார் ஆறு கட்டங்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

Also Read | உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் பெற்றோரை நேரில் சந்தித்து வீடு வழங்கும் ஆணையை வழங்கிய முதல்வர் முக.ஸ்டாலின்..!

HYDERABAD, DEVOTEES, WALK, SABARIMALA, HYDERABAD DEVOTEES

மற்ற செய்திகள்