‘முதல் புருஷனுடன் பிறந்த குழந்தைகளை பார்க்கப் போனாள்’.. 2-வது கணவர் கொடுத்த தண்டனை!
முகப்பு > செய்திகள் > இந்தியாமுதல் திருமணத்தில் உண்டான கசப்பான அனுபவங்களால் திருத்தணியைச் சேர்ந்த 28 வயதான துர்கன் என்பவரை 25 வயதான சிவப்பிரியா 2வது திருமணம் செய்துகொண்டு தன் வாழ்க்கையைத் தொடர்ந்துள்ளார்.
தனியார் நிறுவனத்தில் பண்புரியும் இருவருக்கும் வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் சிவப்பிரியா தற்கொலை செய்துகொண்டதால், சிவப்பிரியாவின் அம்மா உள்ளிட்ட குடும்பத்தினர் கதறி அழுதுள்ளனர்.
இதுபற்றி விசாரித்த போலீஸார், சிவப்பிரியாவின் கணவர் துர்கனை விசாரித்தபோதும், அவர் தன் மனைவி சிவப்பிரியா தற்கொலை செய்துகொண்டதாக கூறவும், அதனை முதலில் நம்பிய போலீஸார், பிறகுதான் போலீஸாரால் சந்தேகப்பட்டு விசாரிக்கப்பட்டார். அப்போதுதான், சிவப்பிரியா தன் முதல் கணவரையும், குழந்தைகளையும் குழந்தைகளின் மீதான பாசத்தால் அதிகமுறை துர்கனிடம் பொய் கூறிவிட்டு சென்று பார்த்ததை துர்கன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் இதனால் சந்தேகமடைந்த துர்கன் ஒரு முறை சிவப்பிரியாவை பின் தொடர்ந்துச் சென்று, அவர் தன் முதல் கணவரையும், முதல் கணவருடனான குழந்தைகளையும் சந்தித்து வருவதை துர்கன் உறுதிப்படுத்தியுள்ளார். பின்னர் வீட்டுக்குவந்த தன் மனைவி சிவப்பிரியாவுடன் தகராறில் ஈடுபட்ட துர்கன் ஆத்திரத்தில் சிவப்பிரியாவை கொன்றுள்ளார்.
ஆனால் தான் செய்த தவறை உணர்ந்த துர்கன், தன் அம்மாவிடமும், நண்பரிடம் கூறியபோது, துர்கனின் அம்மா, இந்த கொலையை தற்கொலையாக மாற்றுவதற்கான ஐடியாவைக் கொடுத்துள்ளார்.
இந்த உண்மையை துர்கன் போலீஸாரிடம் கூறியதை அடுத்து, சிவப்பிரியாவின் தரப்பு உறவினர் கொடுத்த அழுத்தத்தின் பேரில், துர்கன், அவரது தாயார் விஜயா, துர்கனின் நண்பன் லோகேஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பிறகு சிவப்பிரியாவின் முதல் கணவருக்கும் சிவப்பிரியாவுக்கும் பிறந்த குழந்தைகள் தேம்பியழுதது அனைவரின் நெஞ்சையும் கலங்கடித்துள்ளது.