“போலீஸாரின் நெகிழ வைக்கும் மனிதநேயம்.. தெருவோர நபரின் வியக்க வைக்கும் விழிப்புணர்வு!”... வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் தெருவில் சுற்றித்திரியும் நபர் ஒருவருக்கு மனிதாபிமான அடிப்படையில் மூன்று காவலர்கள் உணவுப்பொட்டலம் மற்றும் தண்ணீர் பாட்டில் கொண்டு சென்று கொடுக்கச் செல்கின்றனர். ஆனால் சற்றே மனநிலை பிறழ்ச்சியுடையவர் போல காணப்படும் அந்த நபர் செய்த காரியம் பார்ப்பவர்களை வியக்க வைத்துள்ளது.
ஆம், உணவுப்பொட்டலம் மற்றும் தண்ணீருடன் அந்த நபரை நெருங்கும் போலீஸாரை முதலில் விரட்டுகிறார் அந்த நபர். இதனால் போலீஸார் செய்வதறியாது சற்று தள்ளிச்சென்று நிற்கின்றனர். உடனே போலீஸாருக்கும் அந்த நபருக்கும் பொதுவான நடு இடத்தில் அந்த நபர் வந்து ஒரு கல்லை எடுத்து வட்டம் போடுகிறார். போட்டுவிட்டு தான் அமர்திருந்த இடத்துக்கே சென்று அமர்கிறார்.
பின்னர் அந்த இடத்தில் உணவுப்பொட்டலத்தையும் தண்ணீர் பாட்டிலையும் காவலர்கள் சென்று வைத்துவிட்டு நகர்ந்து நிற்கின்றனர். அதன் பின்னர் அந்த நபர் உணவுப்பொட்டலத்தை போய் எடுத்துக்கொண்டு தன் இடத்துக்கு சென்று அமர்கிறார். காவலர்களின் மனைதநேயத்தையும் தெருவோரம் அமர்ந்திருக்கும் ஒருவருக்குக் கொரோனா தொற்று பற்றிய விழிப்புணர்வையும் வெளிப்படுத்தும்
Everything about this video, be it the humanity of @TheKeralaPolice or the level of awareness of this man on street, gives hope that we shall overcome #Covid19 pic.twitter.com/1Rq4OQQm1q
— Jisha Surya (@jishasuryaTOI) April 10, 2020
இந்த சம்பவம் வீடியோவாக பதிவாகியுள்ளது.