பெங்களூருவில் 426 பேரின் உயிரை காத்த 42 வயது ஹீரோ.. 3000 அடி உயரம்.. கடைசி நேரத்தில் பறந்த மெசேஜ்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெங்களூரு: பெங்களூரு விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் அருகருகே மோதும் நிலை ஏற்பட்ட போது, அங்கு வேலை பார்க்கும் விமான நிலைய பணியாளர் ஒருவர்தான் இந்த விமான விபத்தை தடுத்தார்  என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. என்ன செய்தார், எப்படி விமான விபத்து தடுக்கப்பட்டது என்பது குறித்து இப்போது பார்ப்போம்.

பெங்களூருவில் 426 பேரின் உயிரை காத்த 42 வயது ஹீரோ.. 3000 அடி உயரம்.. கடைசி நேரத்தில் பறந்த மெசேஜ்

பெங்களூரு கேம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 7ம் தேதி  மிகப்பெரிய விபத்து ஏற்பட இருந்தது. இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதும் நிலை ஏற்பட இருந்த நிலையில் அது கடைசி நொடியில் தவிர்க்கப்பட்டது.

இந்த விமான நிலையத்தில்  அடுத்தடுத்து இருந்த இரண்டு ரன் வேக்களில் இருந்து ஒரே நேரத்தில் இரண்டு விமானங்கள் புறப்பட்ட போது விபத்து ஏற்பட இருந்தது. அதை அங்கிருந்த ஊழியர் ஒருவர் தான் தடுத்து நிறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இரண்டு விமானங்கள்

பெங்களூரு சர்வதேச விமானநிலையம் இந்தியாவின் மிக முக்கியமான பிஸியான விமான நிலையங்களில் ஒன்று. இங்கு ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் பயணம் செய்கிறார்கள். கடந்த 7ம் தேதி இரண்டு இண்டிகோ விமானங்கள் அன்று ஒரே நேரத்தில் பெங்களூரில் இருந்து புறப்பட்டது. அதில் ஒன்று மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தா நோக்கி செல்ல வேண்டியதாகும். இன்னொன்று ஒடிசாவின் புவனேஷ்வர் நகரை நோக்கி செல்ல வேண்டியது. இரண்டும் கிட்டத்தட்ட ஒரே ரூட்டில் பயணிப்பவை தான். இப்படிப்பட்ட விமானங்கள் ஒரே நேரத்தில் அருகருகே டேக் ஆப் செய்தால் ஒரு விமானத்தின் பின் பகுதியில் இன்னொரு விமானம் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

ஏர் டிராபிக் கண்ட்ரோலர்

எனவே இப்படியான விபத்துகளை தவிர்க்கத்தான் விமான நிலையத்தில் ஏடிசி எனப்படும் ஏர் டிராபிக் கண்ட்ரோலர் இருப்பார்கள். இவர்கள்தான் எந்த விமானம் எப்போது தரையிறங்க வேண்டும், எப்போது எந்த விமானம் டேக் ஆப் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து வழி நடத்துவார்கள். சில விமானங்களை டிராபிக் கருதி கடைசி நேரத்தில் வானத்திலே சில நிமிடங்கள் யூ டர்ன் அடித்து பறக்க சொல்வார்கள். டிராபிக் குறைந்த பின்னர் விமானத்தை கீழே இறக்க உத்தரவிடுவார்கள்.

how a radar controller mid-air 2 airplane collision in Bangalore

என்ன நடந்தது

இப்படிப்பட்ட நிலையில் பெங்களூரில் 6E-455 மற்றும் 6E 246 ஆகிய இரண்டு விமானங்கள் அன்று ஒரே நேரத்தில் டேக் ஆப் செய்துள்ளது. இரண்டும் அடுத்தடுத்து இருந்த வடக்கு மற்றும் தெற்கு ரன் வேயில் இருந்து புறப்பட தயாராகி உள்ளது. இரண்டும் ஒரே திசையில் செல்ல வேண்டி இருந்தது. ஒரு விமானத்தின் பின் பக்கத்தில் இன்னொரு விமானம் மோதும் நிலை இருந்தது கடைசி நொடியில்.. விமான நிலையத்தில் இருந்த ரேடார் கண்ட்ரோலர் கொடுத்த சிக்னல் காரணமாக இரண்டு விமானமும் வேறு வேறு திசையில் திரும்பியது. .  சில நிமிடம் தாமதித்து இருந்தாலும் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கும். இரண்டு விமானங்களும் மோத வேண்டியதை விமான நிலைய பணியாளர் ( ரேடார் கண்ட்ரோலர்) தடுத்துள்ளார்.

how a radar controller mid-air 2 airplane collision in Bangalore

உயிர்கள் தப்பின

ரேடார் கண்ட்ரோலர் லோகேந்திர சிங் (42 வயது) கொடுத்த கடைசி நேர அலர்ட் காரணமாகவே இரண்டு விமானமும் எதிர் எதிர் திசையில் திரும்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனாயே விபத்து தவிர்க்கப்பட்டு  426 உயிர்கள்  தப்பி உள்ளதாக சொல்லப்படுகிறது.  ஏடிசி செய்ய வேண்டிய வேலையை ரேடார் கண்ட்ரோலர் இருக்கையில் இருந்த லோகேந்திர சிங் கொடுத்த சிக்னல் காரணமாக விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.  இவரின் செயலுக்கு விமான நிலைய அதிகாரிகள் இடையே பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

how a radar controller mid-air 2 airplane collision in Bangalore

ரன்வே

என்ன நடந்தது என்பது குறித்து விமான கட்டுப்பாட்டு இயக்குனரகம்   விசாரித்து வருகிறது. பொதுவாகவே பெங்களூர் விமான நிலையத்தில் உள்ள வடக்கு மற்றும் தெற்கு ரன் வேக்கள் ஒரே நேரத்தில் டேக் ஆப் செய்ய பயன்படுத்தப்படாது. ஏதாவது ஒன்று டேக் ஆப் செய்யவும். இன்னொன்று லேண்ட் செய்யவும் பயன்படுத்தப்படும். அன்று வடக்கு ரன் வே லேண்ட் செய்யவும், தெற்கு ரன் வே டேக் ஆப் செய்யவும் பயன்படுத்தப்பட்டதாம்.

how a radar controller mid-air 2 airplane collision in Bangalore

தகவல் மிஸ்ஸிங்

இந்த நிலையில் ஏடிசி ஊழியர் ஒருவர் டிராபிக் கட்டுப்பாட்டிற்காக தெற்கு ரன்வேவை மூடிவிட்டு வடக்கு ரன் வேவை டேக் ஆப் செய்ய அனுமதி அளித்து உள்ளாராம். ஆனால் இதை பற்றி அந்த தெற்கு ரன் வே கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு அவர் தெரிவிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த ஊழியரின் ஷிப்டும் முடிந்துவிட்டது. இதனால் தெற்கு ரன்வேயில் இருந்தவர்களுக்கு அந்த ரன்வேவை மூட வேண்டும் என்று தெரியவில்லை. இதுதான் சிக்கலை ஏற்பட்டதாக விமான நிலைய வட்டார தகவல்கள் சொல்வதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது.

how a radar controller mid-air 2 airplane collision in Bangalore

கடைசி நொடி

ஒரு பக்கம் ஏற்கனவே வடக்கு ரன் வேவை டேக் ஆப் செய்ய ஓபன் செய்யப்பட்ட நிலையில் இன்னொரு பக்கம் தெற்கு ரன் வேவும் டேக் ஆப் செய்ய ரெடியாக இருந்துள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில்தான் ஏடிசியில் புதிய ஷிப்டுக்கு வந்தவர் இதை கவனிக்காமல் இரண்டு விமானங்களுக்கு டேக் ஆப் அனுமதி கொடுத்து உள்ளாராம். இரண்டு விமானமும் டேக் ஆப் செய்து 3000 அடி உயரம் சென்ற நிலையில் அருகருகே மோதுவது போல சென்றுள்ளது. ஆனால் அதை ரேடாரில் கவனித்த ரேடார் கண்ட்ரோலர் உடனே 2 விமானங்களுக்கும் சிக்னல் கொடுத்து விபத்தை தடுத்து நிறுத்தி இருக்கிறார்.

BENGALURU, BANGALORE, AIRPORT, AIRPLANE, பெங்களூரு, விமான நிலையம், ஏர்போர்ட், விமானம்

மற்ற செய்திகள்