"தூங்குறது மகாராஷ்டிரால, சமைக்குறது தெலுங்கானால".. வீட்டின் குறுக்கே செல்லும் மாநில எல்லைகள்!!.. வியக்க வைக்கும் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாசமீபத்தில் இந்தியா மற்றும் மியான்மார் ஆகிய இரு நாடுகளின் எல்லையில் ஒரு வீட்டின் மத்தியில் போவது தொடர்பான செய்தி சமீபத்தில் அதிக வைரலாக இருந்த நிலையில், தற்போது ஒரு நாட்டுக்குள்ளேயே இரு மாநிலங்களின் எல்லையில் ஒரு வீட்டின் நடுவே போகும் கதை தொடர்பான செய்தி இணையத்தில் அதிகம் பேசுபொருளாக மாறி உள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் எல்லைகளை பிரிக்கும் சமயத்தில் அது ஒரு வீட்டின் குறுக்கே சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதன் காரணமாக அந்த வீட்டின் ஒரு பகுதி, மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்திராபூர் மாவட்டத்திலும், மற்ற சில பகுதிகள் தெலுங்கானாவின் மகாராஜ்குடா கிராமத்திலும் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த மாநில எல்லை, ஒரு சாக்பீஸ் மூலம் கோடு போட்டு பிரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறும் நிலையில், 12 பேர் வசிக்கும் அந்த வீட்டின் சமையலறை ஒரு மாநிலத்திலும் படுக்கையறை மற்றொரு மாநிலத்திலும் உள்ளதாக தெரிகிறது.
இரு மாநிலங்களின் எல்லையில் ஒரே வீடு பிரிக்கப்பட்டுள்ளது தொடர்பான செய்தி தற்போது அதிகம் வைரல் ஆகி வரும் நிலையில், இந்த வீட்டின் உரிமையாளரான உத்தம் பவார், கடந்த 1969 ஆம் ஆண்டு எல்லை ஆய்வு செய்த போது அவர்களின் வீட்டில் பாதி மகாராஷ்டிரிலும் மற்ற பகுதி தெலுங்கானாவில் இருப்பதாக கூறப்பட்டது என்றும் அப்போது எந்த பிரச்சனையும் இல்லை என்று விட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அன்று முதல் இரு மாநில கிராம பஞ்சாயத்துகளுக்கும் வரி செலுத்தி வரும் அந்த குடும்பத்தினர், தெலுங்கானா அரசிடம் இருந்து அதிக பலன்கள் கிடைப்பதாக தெரிவித்துள்ளனர். இரு மாநிலங்களின் எல்லையில் இருக்கும் இந்த வீடை சேர்த்து அப்பகுதியில் உள்ள 12 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தெலுங்கானா மாநிலத்திற்கு தங்களை மாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஒரே வீட்டின் சமையலறை ஒரு மாநிலத்திலும் அதே வீட்டின் படுக்கை அறைகள் இன்னொரு மாநிலத்திலும் இருப்பது தொடர்பான விஷயம் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்