'இதயத்துடிப்பு நின்றுபோன சிறுவன்'!.. நொறுங்கிப் போன குடும்பத்துக்கு... 3 நாட்கள் கழித்து வந்த 'சர்ப்ரைஸ்'!.. மருத்துவமனையில் நெகிழவைக்கும் பாசப்போராட்டம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இதயத்துடிப்பின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு, 36 மணி நேரம் கழித்து நினைவு திரும்பியுள்ளது.

'இதயத்துடிப்பு நின்றுபோன சிறுவன்'!.. நொறுங்கிப் போன குடும்பத்துக்கு... 3 நாட்கள் கழித்து வந்த 'சர்ப்ரைஸ்'!.. மருத்துவமனையில் நெகிழவைக்கும் பாசப்போராட்டம்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு, 16 வயது நிரம்பிய சிறுவன் ஒருவன், அதிக ஓல்டேஜ் மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

மின்சாரம் தாக்கி 10 நிமிடம் கழித்து தான், அருகில் இருந்த இந்த்ராபிரஸ்தா அப்போலோ மருத்துவமனைக்கு எடுத்து செல்ல முடிந்தது. ஆனால், அப்போது அவனுக்கு இதயத்துடிப்பு இல்லை.

அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அச்சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவனுடைய நாடித்துடிப்பு நின்றுவிட்டதை உறுதி செய்தனர்.

அதைத் தொடர்ந்து, நீண்ட நேரம் உடலில் மின்சாரம் பாய்ந்திருந்த காரணத்தால், இதயம் செயலிழந்ததை அறிந்தனர். அச்சிறுவன் மீண்டும் உயிரோடு திரும்புவது கடினம் என்று கருதப்பட்டது.

ஆனால், மருத்துவர்களின் தீவிர முயற்சியால், உடனடியாக CPR செய்யப்பட்டது. இந்த CPR முறையை விரைவாக செய்து முடிக்க வேண்டியது அவசியம். தாமதானால், மூளைக்கு ரத்த ஓட்டம் கிடைக்காமல் போய்விடும். அந்த நிலையில், மூளை பாதிக்கப்பட்டு சுயநினைவு திரும்ப வாய்ப்பில்லை.

அவ்வாறு CPR செய்தும், 45 நிமிடங்கள் கடின போராட்டத்திற்கு பிறகே இதயம் செயல்பட ஆரம்பித்தது. ஆனால், அப்போது நினைவு திரும்பவில்லை.

சிறுவன் எப்போது கண் விழிப்பான் என ஏங்கித்தவித்தனர் பெற்றோர். அனைவரது நம்பிக்கையின் பயனாலும், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பினாலும், சிறுவனுக்கு 36 மணி நேரம் (3 நாட்கள்) கழித்து நினைவு திரும்பியது.

மருத்துவர்களின் இந்த சமயோசித திறன் அனைவரது பாராட்டுதலையும் பெற்றுள்ளது.

 

மற்ற செய்திகள்