Battery Mobile Logo Top
The Legend

DJ, ஆட்டம், பாட்டம்ன்னு களை கட்டிய திருமண விழா.. திடீர்'ன்னு நடந்த அசம்பாவிதம்.. களேபரமான கல்யாண வீடு

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பொதுவாக திருமண நிகழ்ச்சிகள் என்றாலே, அது தொடர்பான பாரம்பரிய நிகழ்வுகள், இடத்திற்கு இடம் மாறுபட்டு இருக்கும்.

DJ, ஆட்டம், பாட்டம்ன்னு களை கட்டிய திருமண விழா.. திடீர்'ன்னு நடந்த அசம்பாவிதம்.. களேபரமான கல்யாண வீடு

Also Read | தந்தை இறந்த அதே நாளில்... மருத்துவமனையில் பிறந்த மகன்.. கதறித் துடித்த தாய்.. மனதை ரணமாக்கும் துயரம்

அது மட்டுமில்லாமல், சில இடங்களில் திருமண நிகழ்ச்சியையே ஒரு திருவிழா போல, மிகவும் விமரிசையாக கொண்டாடவும் செய்வார்கள்.

அந்த வகையில், வட இந்திய பகுதிகளில் எல்லாம் திருமண விழாக்களில் குதிரைகள் மீது மாப்பிள்ளை அமர்ந்து மிக பெரிய ஊர்வலம் செல்வது, ஒரு பாரம்பரிய நிகழ்வாக பல இடங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான வீடியோக்களும், அவ்வபோது இணையத்திலும் அதிக அளவில் வைரலாகும்.

horse stomps over crowd during wedding procession

இந்நிலையில், திருமண நிகழ்ச்சி தொடர்பான ஊர்வலம் என கூறப்படும் நிகழ்வின் போது, நடந்த சம்பவம் ஒன்று, கடும் பரபரப்பை நெட்டிசன்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம், ஹமீர்பூர் மாவட்டத்தில் உள்ள மவுதாஹா என்னும் பகுதியில், ஒரு திருமண விழா தொடர்பான நிகழ்வு நடந்தேறி உள்ளது.

ஏராளமானவர்கள், அப்பகுதியில் கூடியிருக்க வண்டி ஒன்றின் மீது எக்கச்சக்கமான ஸ்பீக்கர்கள் வைக்கப்பட்டு பாட்டும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதிக இரைச்சலுடன், பாட்டு ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில் அதற்கு முன்பாக ஏராளமானோர் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் கொண்டாட்டத்துடன் இயங்கிக் கொண்டு இருக்கின்றனர்.

horse stomps over crowd during wedding procession

அப்பகுதி முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி நிற்கவே, திடீரென ஒரு சம்பவம் அங்கே அரங்கேறியது. கூட்டத்தில் நின்று கொண்டிருந்த அலங்கரிக்கப்பட்ட குதிரை, பாட்டின் சத்தத்தாலும், மக்களின் சத்தத்தாலும் திடீரென அரண்டு போய் பயத்தில் அங்குமிங்குமாக ஓடி உள்ளது.

மிகவும் வேகமாக அந்த குதிரை மக்கள் கூட்டத்துக்கு நடுவே பயந்து தெறித்து ஓடிச் சென்றதால், அங்கிருந்து சுமார் 6 பேருக்கும் மேற்பட்டோர் வரை காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தொடர்பான வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில், அவருடைய கேப்ஷனில், "அதிக சத்தம் மற்றும் கூட்டத்தின் காரணமாக, அந்த குதிரை அங்கிருந்து அரண்டு போய் ஓடி உள்ளது. அனைவரும் கொஞ்சமாவது உணர்வுடனும், மனிதாபிமானத்துடனும் நடந்திருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக சத்தத்தை கேட்கும் போதே குதிரை உள்ளிட்ட மிருகங்கள் அரண்டு போய் இது போன்று பயத்தில் எதையாவது செய்யத் தான் முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | தலைக்கு மேல கடன்.. வீட்டை வித்துடுலாம்ன்னு ரெடி ஆன தம்பதி.. சரியா 2 மணி நேரத்துக்கு முன்னாடி நடந்த 'அதிசயம்'!!

HORSE STOMPS, CROWD, WEDDING FUNCTION, DJ

மற்ற செய்திகள்