'மூன்றில் ஒரு பங்கு பயணிகளுக்கு கொரோனா'.. துபாயைத் தொடர்ந்து ஏர் இந்தியாவுக்கு ஹாங்காங் அரசு விதித்த அதிரடி தடை!
முகப்பு > செய்திகள் > இந்தியாஹாங்காங்கில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுள் 23 பேரில் மூன்றில் ஒரு பங்கு பேர், ஏர் இந்தியா விமானம் மூலமாக வந்த பயணிகள்தான் என்று ஹாங்காங் சுகாதாரத்துறை கூறியுள்ளது.
இதனால் வரும் அக்டோபர் 3 ஆம் தேதி வரை ஏர் இந்தியா விமானங்கள் ஹாங்காங் வருவதற்கு அந்நாட்டு அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலமாக துபாய் சென்ற 2 பயணிகளுக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, எச்சரிக்கை விடுக்கப்பட்டும் கவனக்குறைவாக இருந்ததால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் துபாய் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
இதேபோல், கடந்த ஆகஸ்ட் மாதம் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானங்கள் வருவதற்கும் ஹாங்காங்க் அரசு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்