"சீக்கிரம் வாங்க .. பயமா இருக்கு".. இளம்பெண் விரித்த வலை.. உதவி செய்யப்போய் மாட்டிக்கிட்ட நபர்.. பூட்டிய வீட்டுக்குள்ள கேட்ட அலறல் சத்தம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வசதி படைத்த நபர்களை குறி வைத்து வினோத முறையில் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இந்த சம்பவம் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
போன்கால்
சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர் ஸ்ரீநகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் ஒரு கும்பல் தன்னை மிரட்டி 8 லட்ச ரூபாய் வரையில் பணம் பெற்று இருப்பதாகவும், மேலும் பணம் கேட்டு மிரட்டி வருவதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டிருக்கிறார். அவர் அளித்துள்ள புகாரின் படி சமீபத்தில் அவருக்கு ஒரு பெண்மணி போன் செய்திருக்கிறார். அப்போது தனது குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாகவும் இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மேலும் நேரில் வந்து சிக்கலை தீர்த்து வைக்கும்படியும் அந்த அதிகாரியிடம் உதவி கேட்டு இருக்கிறார் அந்தப் பெண். இதனை நம்பிய அந்த அதிகாரியும் அலுவலகம் முடிந்தவுடன் நேரே அந்த பெண் வீட்டிற்கு சென்று இருக்கிறார். வீட்டில் அந்தப் பெண் மட்டும் தனியாக இருக்க என்ன பிரச்சனை என்ன ஆயிற்று என விசாரித்திருக்கிறார் அந்த அதிகாரி. அப்போது படுக்கையறைக்குள் அந்த பெண் நுழைய அவரையும் உள்ளே வரும்படி சொல்லி இருக்கிறார். இளம் பெண்ணின் சூழ்ச்சியை அறியாமல் அந்த அதிகாரியும் படுக்கையறைக்குள் சென்று என்ன நடந்தது என்பது பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென இருவர் வீட்டிற்குள்ளே நுழைந்திருக்கின்றனர்.
புகார்
இருவரும் அவரை தாக்கியதுடன் இளம் பெண்ணுடன் அறையில் தனியாக இருக்கும் வீடியோ தங்களிடம் இருப்பதாகவும் அதனை குடும்பத்தாருக்கும் இணையதளத்திலும் பரப்பி விடுவோம் எனவும் மிரட்டி இருக்கின்றனர் அந்த இரண்டு மர்ம நபர்கள். இதனால் வெலவெலத்துப்போன போன அந்த அதிகாரி வேறு வழியின்றி அவர்கள் கேட்ட 8 லட்ச ரூபாயை அளித்திருக்கிறார். இதனையடுத்து, அந்த அதிகாரி காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்.
இந்நிலையில், அந்த கும்பலை பிடிக்க காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அதன்பலனாக இளம்பெண் உட்பட 3 பேர் கொண்ட கும்பல் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் அஜய் கனாய், அவரது மனைவி ஷைஸ்தா மற்றும் அவர்களது நண்பர் ஜஹாங்கீர் தார் ஆகியோர் வசதிபடைத்த பலரிடம் இதுபோன்று பணம் பறித்திருப்பதும் தெரியவந்திருக்கிறது. மேலும், வசதிபடைத்த நபர்களிடமிருந்து இந்த கும்பல் 40 லட்ச ரூபாய் வரையில் பறித்திருப்பதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
மற்ற செய்திகள்