'இந்த மருந்து கொரோனாவ போக்குதா'?... 'மறுத்த மருத்துவர்கள்'... ஆனா மக்களில் பாதிப்பேருக்கு அரசே வினியோகம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உலகையே ஆட்டம் காண வைத்துள்ள கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த வைரஸில் இருந்து தப்புவதற்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் ஆர்சனிகம் ஆல்பம்-30 என்ற ஓமியோபதி மருந்து நோய் எதிர்ப்புச்சக்தியைப் பெருக்கி, கொரோனாவை வரவிடாமல் தடுக்கிறது என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. இந்த மருந்தைக் குஜராத் மக்களில் பாதிப்பேருக்கு அரசே வினியோகம் செய்துள்ளது.

'இந்த மருந்து கொரோனாவ போக்குதா'?... 'மறுத்த மருத்துவர்கள்'... ஆனா மக்களில் பாதிப்பேருக்கு அரசே வினியோகம்!

உலக சுகாதார நிறுவனத்திடம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பு உத்திகள் பற்றி விளக்கியபோது இதுகுறித்து தெரிவித்துள்ளது. அங்குள்ள மொத்த மக்கள் தொகை 6.60 கோடி. அதில் 3.48 கோடி பேருக்கு இந்த மருந்து வழங்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே ஆர்சனிகம் ஆல்பம்-30 மருந்து, கொரோனாவுக்கு எதிராக வேலை செய்கிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என விஞ்ஞானிகள் மட்டுமின்றி ஓமியோபதி மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். ஆனாலும் குஜராத் அரசு இந்த மருந்தில் நம்பிக்கை வைத்துள்ளது.

இதுகுறித்து பேசிய குஜராத் மாநில சுகாதார அமைச்சகம், ''ஆயுஷ் மருந்துகள் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே ஆயுஷ் சிகிச்சை நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. சிகிச்சை செயல்திறனை மதிப்பிடுவதற்கு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது'' எனக் கூறியுள்ளது. அதே நேரத்தில் கொரோனாவுக்கு எதிராக ஆர்சனிகம் ஆல்பம்-30 ஓமியோபதி மருந்து தடுப்பு மருந்தாகச் செயல்படுகிறதா என்பது பற்றிய மருத்துவ பரிசோதனை, இதுவரை எந்த முடிவையும் தரவில்லை என்று ஒரு அதிகாரி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பேசிய மாநில அரசு ஆயுஷ் துறை இயக்குநர் பாவ்னா படேல், ''ஆர்சனிகம் ஆல்பம்-30 மருந்து, நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கிறது. ஆனால் இதுதொடர்பான எங்களது ஆராய்ச்சி இன்னும் முடியவில்லை. இதைத் தனியார் துறையின் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளோம்'' எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்