'இதான் சர்வீஸா? வெக்கமா இல்ல?'.. 'அந்த பொண்ணுகிட்ட திருப்பிக் கொடுங்க'.. டிராஃபிக் அதிகாரி அதிரடி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

போக்குவரத்து விதிகள் மற்றும் அவற்றை மீறுவோர்களுக்கான அபராதத் தொகை உட்பட பலவும் அண்மையில் புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தம் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து, தற்போது போக்குவரத்து சோதனைகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஆங்காங்கே வாகன ஓட்டிகளுக்கும் போக்குவரத்து காவலர்களுக்குமான முரண்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

'இதான் சர்வீஸா? வெக்கமா இல்ல?'.. 'அந்த பொண்ணுகிட்ட திருப்பிக் கொடுங்க'.. டிராஃபிக் அதிகாரி அதிரடி!

இந்த நிலையில், சண்டிகரில், ஹேலாமஜ்ரா லைட் பாய்ண்ட்டில், தவறான பாதையில் கார் ஓட்டிவந்த ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம், ஹோம் கார்டு காவலர் ஒருவர் கைநீட்டி லஞ்சம் வாங்கிய சம்பவத்தை, அங்கு விரைந்து வந்த டிராஃபிக் காவல்துறை மெலதிகாரி கண்டித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய காவல்துறை அதிகாரியாய் இருந்துகொண்டு லஞ்சம் பெறுவது குற்றம் என தெரியாதா? இதுதான் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியா? என்று சரமாரியாக கேள்வி கேட்ட அந்த டிராஃபிக் காவல்துறை அதிகாரி, லஞ்சம் வாங்கிய ஹோம் கார்டு காவலரை, கார் ஓட்டிவந்த அந்த பெண்ணிடமே கொடுக்குமாறு வலியுறுத்தினார்.

இதனை அடுத்து, தான் பெற்ற லஞ்சப் பணத்தை தன் பாக்கெட்டில் இருந்து திரும்பிக் கொண்டே எடுத்து, அந்த பெண்ணிடமே அந்த அதிகாரி கொடுத்துவிட்டார். இந்த சம்பவம் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, லஞ்சம் பெற்ற காவலர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

TRAFFIC, BRIBE, VIRAL, TRAFFICFINE, POLICE