முன்னாள் NSE அதிகாரி சித்ராவுக்கு ஜாமீன் மறுப்பு.. "வீட்டு சாப்பாடு".. கோரிக்கைக்கு பரபரப்பு பதில்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

முன்னாள் தேசிய பங்குச் சந்தை தலைவரான சித்ரா ராமகிருஷ்ணனுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டு இருக்கிறது டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.

முன்னாள் NSE அதிகாரி சித்ராவுக்கு ஜாமீன் மறுப்பு.. "வீட்டு சாப்பாடு".. கோரிக்கைக்கு பரபரப்பு பதில்!

கபடி மேட்சுக்கு நடுவே கேட்ட துப்பாக்கி சத்தம்.. பிரபல இந்திய வீரருக்கு நேர்ந்த சோகம்..

முறைகேடு புகார்

தேசிய பங்குச் சந்தையான NSE யின் தலைவராக சித்ரா ராமகிருஷ்ணன் இருந்த காலகட்டத்தில் முறைகேடாக பணியாளர்களை நியமித்தது, பங்குச் சந்தை குறித்த ரகசிய தகவல்களை  வெளியிட்டது ஆகிய முறைகேடுகள் நடைபெற்றதாக பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியமான செபி வழக்கு தொடுத்தது.

இதன்படி, டெல்லியில் வைத்து சித்ரா ராமகிருஷ்ணனை சிறப்பு புலனாய்வு துறை அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்தனர். சித்ராவினை 14 நாட்கள் விசாரணையில் ஈடுபடுத்த சிபிஐ நீதிமன்றத்தில் அனுமதி கோரியது. ஆனால், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 7 நாட்கள் விசாரணைக்கு உத்தரவிட்டது.

Home food not allowed for Chitra Ramakrishnan says CBI Court

காவல் நீட்டிப்பு

இந்நிலையில், 7 நாள் காவல் நேற்றோடு முடிவடைந்ததை அடுத்து சித்ரா ராமகிருஷ்ணன் நேற்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்கு சித்ரா ஒத்துழைக்கவில்லை எனவும் 14 நாள் நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் சிபிஐ வாதிட்டது. இதனை ஏற்றுக்கொண்ட சிபிஐ சிறப்பு நீதிபதி சஞ்சீவ் அகர்வால் சித்ரா ராமகிருஷ்ணனை 14 நாட்கள் (மார்ச் 28 ஆம் தேதிவரை) நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

ஜாமீன் மறுப்பு

பங்குச் சந்தை முறைகேடு வழக்கில் ஆஜரான சித்ரா ராமகிருஷ்ணனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என அவரது தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர். அப்போது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிபிஐ அதிகாரிகள்," சித்ரா ராமகிருஷ்ணனை ஜாமீனில் விடுவிப்பது விசாரணையை பாதிக்கும்" எனத் தெரிவித்தனர். இதனை அடுத்து சித்ரா தரப்பின் ஜாமீன் கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.

Home food not allowed for Chitra Ramakrishnan says CBI Court

சிறப்பு சலுகைகள்

விசாரணையின் போது வீட்டு உணவுகளை உட்கொள்ள அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நீதிமன்றத்தில் முன்வைத்தது சித்ரா தரப்பு. அப்போது பேசிய நீதிபதி," சித்ரா ராமகிருஷ்ணன் விஐபி கிடையாது. சிறையில் அனைவரும் சமம் தான். திகார் சிறையில் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் சிறை உணவையே சாப்பிடுகிறார்கள். நானும் அதனை சாப்பிட்டு இருக்கிறேன். நன்றாகத்தான் இருக்கும்" எனக் கூறி சித்ராவின் கோரிக்கையை மறுத்துவிட்டார்.

Home food not allowed for Chitra Ramakrishnan says CBI Court

அதே நேரத்தில் பகவத் கீதை, அனுமன் சாலிசா ஆகிய வழிபாட்டு புத்தகங்களை சித்ரா வைத்துக்கொள்ள அனுமதி அளிப்பதாக நீதிபதி சஞ்சீவ் அகர்வால் தெரிவித்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹிஜாப் விவகாரத்தில் நீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு..!

HOME FOOD, CHITRA RAMAKRISHNAN, CBI, CBI COURT, NSE, முன்னாள் தேசிய பங்குச் சந்தை தலைவர், சித்ரா ராமகிருஷ்ணன், சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

மற்ற செய்திகள்