‘தோண்ட தோண்ட தங்க நாணயம்’!.. கட்டிட மேஸ்திரிக்கு அடிச்ச அதிர்ஷ்ட காத்து.. ஆனா கடைசியில் நடந்த ‘வேறலெவல்’ ட்விஸ்ட்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகட்டிட மேஸ்திரிக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கப்புதையல் கிடைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சிக்லி பகுதியை அடுத்த பிம்பரி-விதல்நகர் பகுதியைச் சேர்ந்த சதாம் சலார் கான் என்பவரிடம் வரலாற்று தங்க நாணயங்கள் உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து சதாம் சலார் கானின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது சதாம் சலார் கான் வீட்டில் 216 வரலாற்று தங்க நாணயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது சுமார் கி.பி 1720 முதல் 1750 வரையிலான முகலாயர் காலகட்டத்தை சேர்ந்தது என கூறப்படுகிறது. ஒரு நாணயத்தின் மதிப்பு 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் மொத்த நாணயங்களில் மதிப்பு சுமார் 1.3 கோடிக்கும் மேல் இருக்கும் என போலீசார் கூறுகின்றனர்.
இந்த தங்க நாணயங்கள் எப்படி கிடைத்தது என சதாம் சலார் கானின் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ‘நான் ஒரு கட்டிட மேஸ்திரி. சிக்லி பகுதியில் ஒரு கட்டுமான பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன். அந்த சமயம் குழி ஒன்று தோண்டும்போது இந்த தங்கப்புதையல் கிடைத்தது. தோண்ட தோண்ட தங்க நாணயங்களாக வந்தது’ என அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த வரலாற்று தங்க நாணயங்களை தொல்பொருள் துறையினரிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.
மற்ற செய்திகள்