"1 கோடி ரூபாய் நிலம்.." முஸ்லீம் மக்களுக்காக இந்து சகோதரிகள் செய்த விஷயம்.. "20 வருஷம் கழிச்சு அப்பா ஆசைய நிறைவேத்திட்டோம்.."
முகப்பு > செய்திகள் > இந்தியாஹிந்து மதத்தை சேர்ந்த இரண்டு சகோதரிகள், இஸ்லாமிய மக்களுக்கு வேண்டி செய்த உதவி ஒன்று, பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
Also Read | கோடீஸ்வரர்கள் மட்டுமே வாங்கக்கூடிய உலகின் காஸ்ட்லி தண்ணீர் பாட்டில்.. விலையை கேட்டா ஆடிப்போய்டுவீங்க..!
உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தம் சிங் நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள காஷிப்பூர் நகரத்தைச் சேர்ந்தவர் அனிதா (வயது 62). இவரது சகோதரியின் பெயர் சரோஜ் (வயது 57).
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன், இவரது தந்தை உயிரிழந்துள்ளார். தங்களுடைய தந்தையின் கடைசி ஆசையை 20 ஆண்டுகளுக்கு பிறகு சகோதரிகள் இருவரும் இணைந்து நிறைவேற்றி உள்ளனர்.
நிலத்தை பரிசளித்த சகோதரிகள்
அதாவது, தங்களிடம் இருந்த சுமார் 1.2 கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஏக்கர் நிலத்தை, ஈத் பெருநாளுக்கு முன்பாக மசூதிக்கு தானமாக அளித்துள்ளனர். இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த இஸ்லாமியர்கள், ஈத் தொழுகையின் போது, அந்த சகோதரிகளுக்கு வேண்டி பிரார்த்தனையில் ஈடுபடவும் செய்துள்ளனர். கடந்த 2003 ஆம் ஆண்டு உயிரிழந்த லாலா பிராஜ்நந்தன், விவசாயம் செய்து வந்தவர். காசிப்பூர் பகுதியில் இருந்த தன்னுடைய நிலங்களை மகன் மற்றும் இரண்டு மகள்களுக்கு எழுதி வைத்துள்ளார் லாலா பிராஜ்நந்தன்.
தந்தையின் கடைசி ஆசை..
சமீபத்தில் தங்களின் உறவினர்களுடனான உரையாடலின் போது, தங்களிடம் இருந்த நிலத்தில் ஒரு பகுதியை முஸ்லீம் சகோதரர்களுக்கு தங்களின் தந்தை அளிக்க விரும்பியது பற்றி அனிதா மற்றும் சரோஜ் ஆகியோருக்கு தெரிய வந்துள்ளது. டெல்லியில் தனது குடும்பத்தினருடன் வாழ்ந்து வரும் அனிதாவும், மீரட்டில் வாழ்ந்து வரும் சரோஜ்ஜூம், கடந்த சில தினங்களுக்கு முன் காஷிப்பூர் வந்துள்ளனர். தொடர்ந்து, தங்களின் சகோதரர் ராகேஷ் உதவியுடன் நிலத்தை இஸ்லாமியர்களுக்கு ஒப்படைக்கும் சட்டபூர்வ நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
நாடு சிறப்பா இருக்கும்..
இதுகுறித்து பேசியுள்ள ராகேஷ், "எனது தந்தை மத நல்லிணக்கத்தின் மீது தீவிர நம்பிக்கை கொண்டவர். தனது நிலத்தினை ஈத்கா மசூதிக்கு வழங்குவதன் மூலம், பெருநாள் பண்டிகைகளின் போது, இன்னும் கூடுதலாக மக்கள் தொழுகை மேற்கொள்வார்கள் என்றும் அவர் விரும்பி இருந்தார். என் சகோதரிகள் அவரின் ஆசையை நிறைவேற்றி உள்ளனர்" என தெரிவித்துள்ளார்.
இது பற்றி பேசிய ஈத்கா மசூதி கமிட்டியின் தலைவரான ஹசீன் கான், லாலாவை பெரிய மனதுக்காரர் என பாராட்டி உள்ளார். மேலும், அப்பகுதியை சேர்ந்த நௌஷத் கான் என்பவர், "லாலா பிராஜ்நந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த விஷயத்திற்காக, இங்கு வாழும் ஒவ்வொரு முஸ்லீம் குடும்பமும் பாராட்டியுள்ளது. மத ரீதியாக பிளவுபடுத்தப்பட்டு வாழும் இந்த சூழலில், அத்தகைய பெருந்தன்மை மற்றும் மத சார்பின்மைக்கு நாங்கள் தலை வணங்குகிறோம். இப்படிப்பட்ட மக்கள் இருந்தால், நாடு மிக சிறப்பாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்