'ஆம்பள' பையன் 'பொறக்கல'ன்னு கோவத்துல... பொம்பள கொழந்த பொறந்த அன்னைக்கே அத கையில எடுத்து... கோபம் தலைக்கேறி வெறிச்செயலில் ஈடுபட்ட 'கணவர்'... திகைத்து நின்ற 'மனைவி'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் குலை நடுங்க வைக்கும் கொடூரம் ஒன்று அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹிமாச்சல பிரதேச மாநிலம், மண்டி மாவட்டத்தில் நாஸ்லோ என்ற கிராமத்தை சேர்ந்த தம்பதி ஹரிஷ் குமார் - மீனா தேவி. இந்த தம்பதியருக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆன நிலையில், 7 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். திருமணமான நாள் முதல் தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார் ஹரிஷ். கிட்டத்தட்ட மிருகத்தை போல ஹரிஷ் தனது மனைவிடம் நடந்து கொள்ளும் நிலையில், மீனாவுக்கு சில தினங்களுக்கு முன் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
முன்னதாக, தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என ஹரிஷ் உறுதியாக இருந்து வந்த நிலையில், மீனாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் கடும் கோபமடைந்த ஹரிஷ், தனக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லை என கடும் விரக்தியில் இருந்துள்ளார். குழந்தை பிறந்த அன்றே அதனை கையில் எடுத்த ஹரிஷ், தலைகீழாக தூக்கி குழந்தையின் வாய்க்குள் விரலை விட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார். இதனைக் கண்ட மீனா, கணவரின் செயலால் கதறித் துடித்துள்ளார்.
அதன் பின் அந்த குழந்தையை அவரே வெளியில் எடுத்து சென்று விட்டு மீண்டும் தனியாக வீட்டிற்கு வந்துள்ளார். அந்த குழந்தையை அடக்கம் செய்து விட்டதாக மீனாவிடம் ஹரிஷ் தெரிவித்துள்ளார். கணவரின் பதிலால் திகைத்து போன மீனா, பதறிப் போன நிலையில், கணவர் மீது போலீசாரிடம் புகாரளித்துள்ளார். ஹரிஷை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்