'எஸ்.பி.பி-க்கு பத்ம விபூஷண் விருது...' 'சாலமன் பாப்பையா உள்ளிட்ட 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்...' - முழு விவரம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் அதாவது பத்ம விபூஷன், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் விருதுகள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
கலை, சமூக பணி, பொது விவகாரங்கள்,அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, சிவில் சேவை, முதலியனவற்றில் சிறந்து விளங்குபவர்களுக்கு ‘பத்ம விபூஷன்’ விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் மறைந்த பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர் வரிசையின் சிறப்பான சேவைக்கு ‘பத்ம பூஷண்’ மற்றும் புகழ்பெற்றவர்களுக்கு ‘பத்மஸ்ரீ’ விருதும் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. இதில் 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தை சேர்ந்த 10 பேரும் அடங்குவார்கள்.இவ்வருடம் தமிழகத்தை சேர்ந்த பலருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது பட்டியல் பின்வருமாறு :
பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழகத்தை சேர்ந்தவர்கள்..
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் - பின்னணி பாடகர்
P.அனிதா- விளையாட்டுத் துறை
ஸ்ரீ சுப்பு ஆறுமுகம்- கலைத்துறை
சாலமன் பாப்பையா- தமிழறிஞர்
பாப்பம்மாள்- விவசாயம்
பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத்- கலைத்துறை
கே.சி சிவசங்கர்- கலைத்துறை
மராச்சி சுப்புராமன்- சமூக சேவை
சுப்பிரமணியன்- வர்த்தகம் மற்றும் தொழில்துறை
திருவேங்கடம் வீரராகவன்- மருத்துவம்
ஸ்ரீதர் வேம்பு- வர்த்தகம் மற்றும் தொழில்துறை
இந்த விருதுகள் இந்திய ஜனாதிபதியால் வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்