இந்தியாவில் 'கொரோனா'வால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் ? ... மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அதிகாரபூர்வ லிஸ்ட்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் 'கொரோனா'வால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் ? ... மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அதிகாரபூர்வ லிஸ்ட்

கொரோனா வைரஸ் தொற்று மூலம் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதிலும் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக அதிகமாக இருந்து வருகிறது. கொரோனா வைரசின் தீவிரத்தை கட்டுப்படுத்த அனைத்து மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இருந்த போதிலும் கொரோனா வைரஸ் தொற்று மூலம் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக 39 பேரும், அதற்கு அடுத்தபடியாக கேரள மாநிலத்தில் 26 பேரும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

CORONA VIRUS, INDIA