மத்தியான நேரத்துல திடீர்னு இரவாக மாறிய வானம்.. அதிர்ந்து போன மக்கள்.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மிசோரம் மாநிலத்தில் நண்பகல் நேரத்தில் திடீரென வானம் இரவு போல மாறியதால் மக்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். இந்நிலையில் இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன.

மத்தியான நேரத்துல திடீர்னு இரவாக மாறிய வானம்.. அதிர்ந்து போன மக்கள்.. வீடியோ..!

                        Images are subject to © copyright to their respective owners.

மிசோரம்

இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான மிசோரமில் நேற்று வித்தியாசமான ஒரு வானிலை நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது. அம்மாநிலத்தில் சில பகுதிகளில் கனமழை, கடுமையான காற்று ஆகியவை ஏற்பட்டிருக்கிறது. இதனால் கருமேகங்கள் வானை மூட, திடீரென நண்பகல் நேரத்திலேயே வானம் இரவு போல காட்சியளித்திருக்கிறது. இதனால் சாலைகள் கண்களுக்கு புலப்படாத நிலையில் லைட்களை எரியவிட்டபடி வாகனங்கள் சாலையில் மிக மெதுவாக ஊர்ந்து சென்றிருக்கின்றன.

Images are subject to © copyright to their respective owners.

நண்பகல் நேரத்தில் வானம் திடீரென இரவு போல மாறியதால் மக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் சிலர் இதனை வீடியோவாக எடுத்தும் தங்களது சமூக வலை தள பக்கங்களில் பதிவிட்டு வந்திருக்கின்றனர். மாநில தலைநகர் Aizawl ல் கனமழை பெய்த நிலையில் கடுமையான காற்றும் வீசியிருக்கிறது. மிசோரம் மாநிலத்தின் வட பகுதிகள் இதனால் கடுமையான பாதிப்புகளை சந்தித்ததாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டிருக்கின்றன.

 

எச்சரிக்கை

குறிப்பாக சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்திருக்கிறது. மார்ச் 15 முதல் 17 வரை மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மிசோரத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. 16 ஆம் தேதிக்கு பிறகு மழையின் தாக்கம் அதிகம் இருக்கலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.

Images are subject to © copyright to their respective owners.

இதனிடையே கனமழை காரணமாக வானிலையே சட்டென்று மாறிய சம்பவம் அம்மாநில மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன.

 

MIZORAM, CLIMATE

மற்ற செய்திகள்