“இந்த நேரத்துல மட்டும் வெளில வந்துராதீங்க.. அடுத்த 5 நாளைக்கு வெயில் மண்டையை பிளந்துரும்!”.. 8 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்!
முகப்பு > செய்திகள் > இந்தியாவரும் நாட்களில் இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் வெப்பநிலை அதிகமாக உயர வாய்ப்பு இருப்பதால் 8 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
இந்தியா உட்பட உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் மட்டும் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசைப் பட்டியலில் 10-வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. இது இந்திய மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி நோய்க் கொடுமை ஒருபுறமிருக்க இன்னொரு இயற்கை பேரிடரால் உருவான ஆம்பல் புயலால் மேற்கு வங்க மாநிலம் நிலைகுலைந்தது. இந்த நிலையில் வட இந்தியாவின் பல மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படும் என்பதால் யாரும் வெளியே வரவேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்து ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
டெல்லியைப் பொறுத்தவரை 46 டிகிரி செல்சியஸ் வெப்பமும், உத்தரப் பிரதேசத்தை பொறுத்தவரை 48 டிகிரி வெப்பமும் அடுத்த ஓரிரு நாட்களில் இருக்கும் என்றும் 28 ஆம் தேதிக்கு பிறகே இது தணியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் அடுத்த 5 நாட்களுக்கு, இந்தியாவின் பஞ்சாப், ஹரியானா, சண்டிகார், டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என்பதால் இந்த மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரங்களில் பகல் 1 மணிமுதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது. கோடை காலத்தில் வெப்ப நிலை அதிகரித்ததையடுத்து, வழங்கப்பட்ட முதல் அலெர்ட் இந்த வருடம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா ஊரடங்கு காரனமாக, வேறு மாநிலங்களில் பணிபுரிந்த வடமாநில புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலரும் நெடுஞ்சாலை மார்க்கமாக, தங்களது சொந்த ஊர்களுக்கு கிலோ மீட்டர் கணக்கில் நடந்தே போகும் நிலையில் இந்த வெப்பநிலையை அதிகரிப்பு சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்