WATCH VIDEO: 'கொரோனா ஆய்வுக்கு சென்ற மருத்துவக் குழு'... 'உள்ளூர் மக்களால் நேர்ந்த கடும் துயரம்'... '2 பெண் மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு நிகழ்ந்த பரிதாபம்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா பரிசோதனைப் பணியில் ஈடுபட்டு இருந்த 2 பெண் மருத்துவர்கள் உள்பட மருத்துவ பணியாளர்கள் மீது பொதுமக்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 76 சதவீதம் பேர் இந்தூரை சேர்ந்தவர்கள். இதனால் அந்த நகரில் கொரோனா தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தூரின் தாட் பட்டி பக்கல் பகுதியில் புதிதாக இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அந்த பகுதியில் சுமார் 54 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இவர்களை தினமும் 3 பேர் கொண்ட மருத்துவக்குழு பரிசோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வழக்கம் போல ஆய்வு மேற்கொள்ள சென்ற அவர்களை திடீரென அப்பகுதியினர் கற்களை வீசித் தாக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவக்குழு தங்களை பாதுகாத்துக் கொள்ள அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
அவர்களை மீட்க வந்த காவல் துறையினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த தாக்குதலில் இரண்டு பெண் மருத்துவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மருத்துவக்குழுவினர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
प्रिय @ChouhanShivraj जी, Indore के इन जाहिलों से बड़ा देशद्रोही आज कोई नहीं है. इन्होंने न सिर्फ़ क़ानून तोड़ा है बल्कि हमारे #CoronaWarrior का हौसला भी टूटा होगा.
इन्होंने MP और पूरे देश की जान भी ख़तरे में डाली है. इन सब की जगह सिर्फ़ जेल में है pic.twitter.com/0PEowDigra
— Corona Warrior Manak Gupta (@manakgupta) April 2, 2020