'லிப்ட் இல்லாம மாடி ஏறி வரோம்'... 'அந்த காசையும் எடுத்துக்குறாங்க'... 'அதையும் தாண்டி டெலிவரிக்கு கூடுதல் கட்டணம்'?... உயர் நீதிமன்றம் அதிரடி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சிலிண்டர் விநியோகம் செய்யும் ஏஜன்சிகள் டெலிவரி செய்யும் தொழிலாளிகளுக்கு உரியக் கட்டணத்தை வழங்காமல் நுகர்வோரிடம் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்க நிர்பந்தப்படுத்துவதாக பல புகார்கள் எழுந்தது.

'லிப்ட் இல்லாம மாடி ஏறி வரோம்'... 'அந்த காசையும் எடுத்துக்குறாங்க'... 'அதையும் தாண்டி டெலிவரிக்கு கூடுதல் கட்டணம்'?... உயர் நீதிமன்றம் அதிரடி!

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் டெலிவரி செய்யக் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கேஸ் ஏஜென்சிக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை அன்னனூரைச் சேர்ந்த லோகரங்கன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அவருடைய மனுவில், ''சிலிண்டர் டெலிவரி செய்வதற்காக கேஸ் ஏஜென்சிக்களுக்கு டெலிவரி கட்டணம் வழங்கப்படும் நிலையில், இந்த தொகையை சிலிண்டர்களை டெலிவரி செய்யும் நபர்களுக்கு வழங்காமல், ஏஜென்ஸிக்களே எடுத்துக் கொள்வதாகக் குற்றம் சாட்டி இருந்தார்.

அதேநேரத்தில் டெலிவரிக்காக நுகர்வோரிடம் கட்டணம் வசூலிக்கும்படி, டெலிவரி செய்யும் நபர்கள் நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் புகார் தெரிவித்திருந்தார். அந்த வகையில் பொதுமக்களின் பணம் 500 கோடி ரூபாய்க்கு மேல் சுரண்டப்படுவதாகவும், இதைத் தவிர்க்க டெலிவரி செய்யும் நபர்களுக்குச் சீருடை, அடையாள அட்டைகள் வழங்கி அவர்களின் பணியை வரன்முறை செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த வழக்கானது தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலிண்டர் சப்ளை செய்ய கூடுதல் கட்டணம் வசூலித்தால், அதுகுறித்து புகார் அளிக்க வசதி உள்ளதாகவும், அந்த புகார்களின் மீது நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

HC orders oil companies to ensure agencies do not charge delivery fees

இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தினர். இதற்கிடையே சிலிண்டர் விநியோகம் செய்யும் ஏஜன்சிகள் டெலிவரி செய்யும் தொழிலாளிகளுக்கு உரியக் கட்டணத்தை வழங்காமல், டெலிவரி கட்டணத்தையும் எடுத்துக் கொள்வது பயனாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்