VIDEO : 'பேரப்பிள்ளைங்க' எடுத்த 'வீடியோ'வில்,,.. பதிவான மனதை நொறுக்கும் 'காட்சி',,.. "உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லியா??"... கலங்கி நிற்கும் 'நெட்டிசன்கள்'!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஹரியானா மாநிலம் சோனிபட் என்னும் பகுதியில் 82 வயதான மூதாட்டி ஒருவரை அவரது மருமகள் மற்றும் மருமகளின் தாயார் ஆகியோர் இணைந்து தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIDEO : 'பேரப்பிள்ளைங்க' எடுத்த 'வீடியோ'வில்,,.. பதிவான மனதை நொறுக்கும் 'காட்சி',,.. "உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லியா??"... கலங்கி நிற்கும் 'நெட்டிசன்கள்'!!!

தனது தாய்க்கு நேர்ந்த கொடூரம் தொடர்பாக, அந்த மூதாட்டியின் மகன் போலீஸ் நிலையத்தில் புகாரளித்திருந்தார். உடனடியாக போலீசார் நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில், அந்த பெண்ணையும் பெண்ணின் தாயாரையும் கைது செய்தனர். 

அந்த மூதாட்டியின் பேரப்பிள்ளைகளில் ஒருவர் இந்த வீடியோவை எடுத்துள்ளார். அப்போது, அந்த பெண் தனது மாமியாரை குப்பை வாரும் தட்டு ஒன்றை கொண்டு தாக்குகிறார். மேலும், வீடு வேலைகளை செய்யும்படி தனது வயதான மாமியாரிடம் மிகவும் கடுமையாக அவர் கட்டாயப்படுத்தவும் செய்கிறார்.

'வயதான பெண்ணின் மகனின் புகாரைத் தொடர்ந்து இரண்டு பேரையும் கைது செய்துள்ளோம். அவர்கள் இரண்டு பேர் மீதும், வயதான பெண்ணை காயப்படுத்தியதற்கும், குற்றவியல் மிரட்டல் விடுத்ததன் பெயரிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது' என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

மற்ற செய்திகள்