எதே 3 ஏர்போர்ட்டா..? ஊராட்சி மன்ற தேர்தல் வேட்பளாரின் நூதன வாக்குறுதிகள்.. List-அ கேட்டாவே திக்குன்னு இருக்கே.. யாரு சாமி இவரு..?
முகப்பு > செய்திகள் > இந்தியாஹரியானா மாநிலத்தில் கிராம தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கொடுத்திருக்கும் வாக்குறுதிகள் பலரையும் திகைப்படைய செய்திருக்கின்றன. மேலும், அவருடைய போஸ்டர்கள் தற்போது சோசியல் மீடியாவில் அதிகளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகின்றன.
தேர்தல்
பொதுவாக தேர்தலின்போது வேட்பாளர்கள் பல வாக்குறுதிகளை அளிப்பது உண்டு. மக்களின் நலன் சார்ந்தும், உள்கட்டுமானத்தை அதிகரிக்கவும் வேட்பாளர்கள் பல வாக்குறுதிகளை மக்களிடத்தில் வழங்குவதை நாம் பார்த்திருப்போம். ஆனால், ஹரியானாவில் ஒருவர் அறிவித்திருக்கும் வாக்குறுதிகள் பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது.
ஹரியானா மாநிலத்தின் சர்சத் (Sarsadh) கிராமத்தில் சார்பஞ் பதவிக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் ஜெயகரன் லத்வா என்பவர் போட்டியிடுகிறார். இதில், வெற்றிபெற்றால் விமான நிலையம், பெண்களுக்கு இலவச மேக்கப் கிட், வீட்டுக்கு ஒரு பைக் என வாக்குறுதிகளை கொடுத்து அனைவரையும் திக்குமுக்காட செய்திருக்கிறார் ஜெயகரன் லத்வா. இவருடைய வாக்குறுதிகள் அடங்கிய போஸ்டர் கிராமம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
வாக்குறுதிகள்
ஜெயகரன் லத்வா தனது வாக்குறுதியில், தான் வெற்றி பெற்றால் சர்சாத் கிராமத்தில் 3 விமான நிலையங்கள் அமைக்கப்படும், பெண்களுக்கு இலவச மேக்கப் கிட் வழங்கப்படும், பெட்ரோல் 20 ரூபாய்க்கு விற்கப்படும், சிலிண்டர் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு பைக் வழங்கப்படும், சர்சத் - டெல்லி இடையேயான மெட்ரோ ரயில் சேவை துவங்கப்படும், இலவச Wi-fi, கிராம இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும், பிரதமர் மோடியின் மன் கீ பாத் நிகழ்ச்சி தினந்தோறும் ஒலிபரப்பப்படும், இலவச மது, கோஹானா பகுதிக்கு ஹெலிகாப்டர் வசதி செய்து தரப்படும் - உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்திருக்கிறார்.
இந்நிலையில், இந்த போஸ்டரின் புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஐபிஎஸ் அதிகாரியான அருண் போத்ரா, "இந்த கிராமத்திற்கு செல்ல இருக்கிறேன்" என ஜாலியாக குறிப்பிட்டுள்ளார். இதனிடையே இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Am shifting to this village 🤣 pic.twitter.com/fsfrjxbdLc
— Arun Bothra 🇮🇳 (@arunbothra) October 9, 2022
மற்ற செய்திகள்