'இந்தியால நீங்க அனுபவிக்குற சந்தோஷம்...' 'அங்க' போனா கிடைக்க சான்ஸே இல்ல...! - மெகபூபா முப்திக்கு 'பதிலடி' கொடுத்த அமைச்சர்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பத்தாவது முதலமைச்சராக கடந்த 2016-ஆம் ஆண்டு பதவி ஏற்றவர் மெகபூபா முப்தி. ஜம்மு காஷ்மீர் மக்களின் ஜனநாயக கட்சியின் தலைவரும், காஷ்மீர் மாநில முதல் பெண் முதல்வருமாக விளங்கிய மெகபூபா முப்தி கடந்த சில தினங்களுக்கு முன் ஆப்கான் விஷயத்தை கூறி, இந்தியாவிற்கு எச்சரிக்கை விடும் தொனியில் பேசியுள்ளார்.
அப்போது, 'காஷ்மிரில் இருக்கும் எங்களின் பொறுமையை சோதிக்காதீர்கள். இந்தியா காஷ்மீரிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்.
அதோடு, நீங்கள் கொள்ளையடித்ததை திருப்பி தர வேண்டும். காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக மக்கள் அமைதியாக போராட வேண்டும்.' எனக் கூறினார்.
அதுமட்டுமல்லாமல், 'ஆப்கானில் அமெரிக்கா தங்களின் மூட்டை முடிச்சுகளை கட்டி கிளம்பிக் கொண்டிருக்கிறது. இதற்கு தாலிபானின் விடாமுயற்சி தான் காரணம். இந்தியா இனி அடிக்கடி பாகிஸ்தானுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்' எனக் கூறி தாலிபான்களை புகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கு சூசகமாக எதையோ சொல்லியுள்ளார்.
மெகபூபா முப்தியின் இந்த பேச்சுக்கு ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், 'எங்களை இங்கிருந்து அகற்றுவது பற்றி யாராலும் யோசிக்க முடியாது. பாகிஸ்தான் மீது உங்களுக்கு அன்பு இருந்தால், நீங்கள் தாளரமாக அங்கு செல்லுங்கள். இந்தியாவில் நீங்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சி பாகிஸ்தானில் வெகுதொலைவில் உள்ளது என்பதை அங்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள்' என காட்டமாக கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்