"அது வெறும் நகரம் மட்டும் இல்ல, ஒரு உணர்வு".. சொந்த ஊர் குறித்து தொழிலதிபர் போட்ட பதிவு.. உருகும் நெட்டிசன்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய பணக்காரர்களுள் ஒருவரும் தொழிலதிபருமான ஹர்ஷ் வர்தன் கோயங்கா தனது சொந்த நகரமான கொல்கத்தா குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார்.
Also Read | வித்தை காட்டிய ஐஸ் கிரீம் அங்கிள்.. அசால்ட்டா டீல் செஞ்ச குட்டிப்பையன்.. வைரலாகும் கியூட் வீடியோ..!
நகரமயமாக்கல் துவங்கிய காலத்தில் வேலைக்காக கிராமங்களில் இருந்து வெளியூர்களுக்கு குறிப்பாக தொழில்துறையில் மேம்பட்ட நகரங்களுக்கு மக்கள் குடிபெயர்ந்தனர். இன்றைய தேதியில், படிப்பை முடித்துவிட்டு மாணவர்கள் பலர் சொந்த ஊரில் இருந்து வேறு நகரங்களில் வேலைவாய்ப்புக்காக சென்று அங்கேயே செட்டில் ஆகிவிடுகிறார்கள். என்னதான் வசதிக்காகவும், வேலைக்காகவும் வேறு ஊர்களில் தங்கியிருந்தாலும் சொந்த ஊர் குறித்த ஞாபகங்கள் நமக்கு வராமல் இருப்பதில்லை.
தினந்தோறும் ஏதாவது ஒருவகையில், சொந்த ஊர் பற்றிய நினைவுகள் நம்முடைய நெஞ்சில் எழுந்துவிடும். இந்த பிரிவு தான் நம்முடைய ஊர் பற்றிய காதலை மென்மேலும் அதிகரித்துக்கொண்டே இருக்கச் செய்கிறது. அந்த வகையில் இந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஹர்ஷ் கோயங்கா தனது சொந்த நகரமான கொல்கத்தா குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்தப் பதிவு சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஹர்ஷ் கோயங்கா
இந்திய பணக்காரர்களுள் ஒருவரும் RPG குழுமத்தின் தலைவருமான ஹர்ஷ் வர்தன் கோயங்கா ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட அறிக்கையின் படி இவருடைய சொத்து மதிப்பு 2.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அதன் அடிப்படையில் கோயங்கா இந்திய பணக்காரர்களின் பட்டியலில் 85 வது இடத்திலும் உலக பணக்காரர்களின் பட்டியலில் 1445 ஆவது இடத்திலும் உள்ளார்.
1957 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்த கோயங்கா, அங்கேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பையும் முடித்திருக்கிறார். கொல்கத்தாவின் செயின்ட் சேவியர் கல்லூரியில் பொருளாதாரம் படித்த கோயங்கா அதைத் தொடர்ந்து, ஸ்விட்சர்லாந்தில் MBA படித்திருக்கிறார்.
உணர்வு
இந்நிலையில், கோயங்கா தனது ட்விட்டர் பதிவில்,"கொல்கத்தா ஒரு நகரம் அல்ல, அது ஒரு உணர்வு. இந்நகரம் எனக்குள் ஏக்கத்தை வளர்க்கிறது. அதன் உணவு, அதன் இனிமையான மொழி, அதன் கலாச்சாரம், அதன் ஆக்ரோஷமான அரசியலுக்காக நான் அதை Miss செய்கிறேன். நான் உடல் ரீதியாக அங்கே இல்லாமல் இருக்கலாம், ஆனால் என்னில் ஒரு பகுதி எப்போதும் அங்கே தங்கியிருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு சமூக வலை தளங்களில் வைரலாக பரவிய நிலையில், நெட்டிசன்கள் சொந்த ஊர் குறித்த தங்களது நினைவுகளை கமெண்டாக பதிவிட்டு வருகின்றனர்.
Kolkata is not a city, it is an emotion. The city breeds nostalgia. I miss it for its food, its sweet language, its culture, its fierce politics. I may not be physically present, but a part of me has always stayed back. pic.twitter.com/YkAbBDuVLD
— Harsh Goenka (@hvgoenka) August 30, 2022
மற்ற செய்திகள்