“இந்திய மக்கள் தொகையில்”.. “பாதிக்குப் பாதி பேர் கொரோனாவால் பாதிக்கக் கூடும்!”.. “ஜூலை மாதம் தொடக்கத்துல மட்டும்...” ஆய்வறிக்கை சொல்வது என்ன?
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 70 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
இந்த நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய மக்கள் தொகை எவ்வளவோ, அதில் பாதிக்கு பாதி பேர் அதாவது 67 கோடி பேருக்கு கொரோனா இருக்கும் என தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தை சேர்ந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த அறிக்கைப்படி இந்தியாவில் கொரோனாவின் சமூக பரவல் கூடுமென்றும் இதில் 90 சதவீதம் பேர் தங்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது தெரியாமலேயே வாழத் தொடங்குவார்கள் என்றும் இவர்களில் 5 சதவீதம் பேர் மட்டுமே ஆபத்தான நிலையில் இருப்பார்கள் என்றும், அதாவது 67 கோடி பேரில் 5% என்பது கிட்டத்தட்ட 30 மில்லியன் ஆக இருக்கும் என்றும் அறிஞர்கள் கணித்துள்ளனர்.
எது எப்படியோ இந்தியாவில் 1 கோடியே 30 லட்சம் படுக்கைகள் உள்ள நிலையில் கொரோனா அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியா போதுமான சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. விஞ்ஞானிகளின் கணிப்புப்படி ஜூலை மாத தொடக்கத்தில் இந்தியாவில் வைரஸ் பரவலின் நிலை உச்சத்தை எட்டும் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இதனால் வருங்காலத்தில் தேவையான சுகாதார நடவடிக்கைகளை மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மற்ற செய்திகள்