VIDEO: 'ஏய்! இங்க வா... அடிக்கலாம் மாட்டேன்...' - அட்ரஸ் கேக்குற மாதிரி அருகே வந்து.. இளைஞர் பார்த்த வேலை... பதிலுக்கு, தரமான சம்பவம் செய்துவிட்ட இளம்பெண்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அசாம் மாநிலம்  கவுகாத்தியை சேர்ந்தவர் பாவனா காஷ்யப், இவர் கடந்த வெள்ளிக்கிழமை (30-07-2021) மாலையில் ஆள் அதிகம் காணப்படாத சாலை ஒன்றில் தனியாக நடந்து வந்துள்ளார். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞர் பைக்கில் இருந்துக்கொண்டே வழி கேட்டுள்ளார்.

VIDEO: 'ஏய்! இங்க வா... அடிக்கலாம் மாட்டேன்...' - அட்ரஸ் கேக்குற மாதிரி அருகே வந்து.. இளைஞர் பார்த்த வேலை... பதிலுக்கு, தரமான சம்பவம் செய்துவிட்ட இளம்பெண்...!

அவர் கேட்ட முகவரி தனக்கு தெரியாது எனவும், வேறு யாரிடமாவது கேட்டுக்கொள்ளுங்கள் என பாவனா கூறியிருக்கிறார். இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத விதமாக அந்த இளைஞர் பாவனா காஷ்யப்பின்பிடம் அத்துமீறி நடந்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த பாவனா உடனே சுதாரித்துக் கொண்டு இயல்பு நிலைக்கு வந்துள்ளார். அத்துமீறி விட்டு அங்கிருந்து தப்பித்து செல்ல முயன்ற இளைஞரை தனது முழு பலத்தையும் பயன்படுத்தி அந்த நபரின் பைக்கை இழுத்து பிடித்து அப்படியே தூக்கியிருக்கிறார். இதன் காரணமாக அந்த நபரால் வண்டியை நகர்த்த முடியவில்லை.

30 நொடிகள் இறுக்கமாக பிடித்தவர், பைக்கோடு சேர்த்து அந்த நபரை அருகே இருந்த சாக்கடை கால்வாயில் தள்ளிவிட்டுள்ளார். தனது பைக் சாக்கடைக்குள் விழுந்துவிட்டதால் அந்த நபரால் உடனடியாக அங்கிருந்து தப்பித்து செல்ல இயலவில்லை. வேறு வழியில்லாமல் அவர் வசமாக மாட்டிக்கொண்டார்.

இதன் பின்னர் அந்த வழியாக வந்தவர்களில் ஒருவர் நடந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்யத் தொடங்கியுள்ளார்.

அத்துமீறி நடந்த  நபரின் பெயர் மதுசனா ராஜ்குமார் என்பதும் அவர் கவுகாத்தி அருகேயுள்ள பஞ்சபாரி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் விசாரணையில் தெரிய வந்தது. தெரியாமல் செய்துவிட்டேன் விட்டுவிடுமாறு மன்னிப்பு கேட்டு கெஞ்சியுள்ளார். ஆயினும் உடனடியாக போலீசாருக்கு  தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்து மதுசனா ராஜ்குமாரை போலீசாரிடம் ஒப்படைத்தார் பாவனா.

 

பாவனாவிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட இளைஞரை வளைத்துப்பிடித்த வீடியோவையும் அவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் . மேலும், பாவனாவிடம் தகாத முறையில் நடந்துக்கொண்ட நபர் மீது தற்போது டிஸ்புர் காவல் நிலையத்தில்  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்