‘10 முறை பல்டி அடித்து பறந்து விழுந்த கார்’.. 4 பெண்கள் உட்பட 6 பேர் உடல் நசுங்கி பலியான சோகம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாடிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உடல் நசுங்கி பலியாகினர்.

ஆந்திரப்பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள காக்குமானு கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் அருகில் உள்ள எட்டுகூர் கிராமத்துக்கு காரில் சென்றுள்ளனர். அங்குள்ள உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மீண்டும் காரில் ஊருக்கு திரும்பியுள்ளனர். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தாறுமாறாக ஓடி சுமார் 10 முறை பல்டி அடித்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் காரில் பயணித்த 4 பெண்கள் உட்பட 6 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அருகில் உள்ள கிராம மக்களின் உதவியுடன் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். விபத்து குறித்த தகவலறிந்து விரைந்த வந்த உறவினர்கள், இறந்தவர்களின் சடலங்களைப் பார்த்து கதறி அழுதனர்.