'52 வயசாகியும் கல்யாணம் ஆகல...' 'செல்போனுக்கு வந்த ஒரு போன்கால்...' 'நான் சொல்றத பண்ணீங்கன்னா 35 வயசுல ஒரு பொண்ணு கெடைக்கும்...' - தலையில் மிளகாய் அரைத்த கும்பல்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குஜராத் மாநிலம் சுபன்பூராவைச் சேர்ந்தவர் மதன் குமார் (52). இவர் தொழிலாளர் நலத்துறையில் பணிபுரிந்து வருகிறார். வயது 52-ஐ கடந்தபோதிலும் இன்னும் திருமணம் நடக்கவில்லை. இதன்காரணமாக பல ஆண்டுகளாக மன உளைச்சலில் இருந்து வந்த அவர், தற்போது மீண்டும் திருமணம் செய்து கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.

'52 வயசாகியும் கல்யாணம் ஆகல...' 'செல்போனுக்கு வந்த ஒரு போன்கால்...' 'நான் சொல்றத பண்ணீங்கன்னா 35 வயசுல ஒரு பொண்ணு கெடைக்கும்...' - தலையில் மிளகாய் அரைத்த கும்பல்...!

இதனையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டு கல்யாணத்திற்கு வரன் தேடும் மேட்ரிமொனியில் தனது பெயர், தொடர்பு எண், முகவரி உள்ளிட்ட விவரங்களை மதன் குமார் பதிவு செய்தார்.

இந்த நிலையில், சில வாரங்கள் கழித்து அவரது செல்போனுக்கு திடீரென ஒரு அழைப்பு வந்துள்ளது. அப்போது எதிர்முனையில் பேசியவர், தன்னை ஒரு  ஜோதிடர் என அறிமுகப்படுத்தி இருக்கிறார். பின்னர், மதன் குமாருக்கு ஏகப்பட்ட தோஷங்கள் இருப்பதாக கூறிய அந்த நபர், அவற்றை கழித்துவிட்டால் 35 வயது பெண்ணுடன் அவருக்கு திருமணம் நடக்கும் என்றும் நம்ப வைத்துள்ளார்.

இதை உண்மை என நம்பிய மதன்குமார், அந்த நபர் அவ்வப்போது தொடர்புக்கொண்டு கேட்டு வந்த பணத்தை அவரது வங்கிக் கணக்கில் செலுத்தி வந்துள்ளார்.

இதேபோன்று, மேலும் பல நபர்களும் மதன் குமாரிடம் ஜோதிடர்கள், ரிஷிகள் என அறிமுகமாகி பணத்தை கறந்துள்ளனர். இவ்வாறு கடந்த மூன்று ஆண்டுகளாக ரூ.97 லட்சத்தை அந்த நபர்களிடம் இழந்துள்ளார்.

இந்த நிலையில், இத்தனை பரிகாரங்களை செய்தும் தனக்கு திருமணம் ஆகாததை நினைத்துப் பார்த்த அவர், ஒரு மோசடி கும்பலால் தான் ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கிறோம் என்பதை தாமதமாக உணர்ந்திருக்கிறார்.

இதனையடுத்து, இந்த மோசடி விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில்மதன் குமார் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் வழக்கு செய்துள்ள போலீசார், தொடர்பு எண், வங்கிக் கணக்குகளை வைத்து மதன் குமாரிடம் மோசடி செய்த மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

மற்ற செய்திகள்