"ஒரு பக்கம் 'வரதட்சண' கொடும"... "இன்னொரு பக்கம் அவரோட 'ஃப்ரெண்ட்ஸ்' கூட பழகச் சொல்லி"... கொடூரத்தின் உச்சத்திற்கே சென்ற 'கணவர்'... அதிர்ந்து நின்ற 'மனைவி'!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் மீது மஹிலா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

"ஒரு பக்கம் 'வரதட்சண' கொடும"... "இன்னொரு பக்கம் அவரோட 'ஃப்ரெண்ட்ஸ்' கூட பழகச் சொல்லி"... கொடூரத்தின் உச்சத்திற்கே சென்ற 'கணவர்'... அதிர்ந்து நின்ற 'மனைவி'!!!

அந்த பெண்ணுக்கு கடந்த 2002 ஆம் ஆண்டு ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு முன்னதாக, மணமகன் எம்.பி.ஏ படித்துள்ளதாகவும், சொந்தமாக டெக்ஸ்டைல்ஸ் ஒன்று உள்ளதாகவும் மணமகனின் வீட்டார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், பெண் வீட்டார் சார்பாக சுமார் 50 பவுன் நகைக்கு மேல் அளிக்கப்பட்டு திருமணத்தை நடத்தி வைத்தனர்.

இந்த தம்பதியருக்கு கடந்த 2005 ஆம் ஆண்டில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், தனது கணவர் எம்.பி.ஏ பட்டதாரி இல்லை என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. இதனால், அந்த பெண் லோன் எடுத்து டிராவல் ஏஜென்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். ஆனால், அதனை அவரது கணவர் சரிவர செய்யாததால் பிசினஸ் பெரிதாக செல்லவில்லை என தெரிகிறது. மேலும், அவரது கணவரும் சூதாட்டம் மற்றும் போதை பொருட்களில் அதிகம் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், மனைவியிடம் இன்னும் வரதட்சணை தர வேண்டும் என கூறி கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினர் அவரை சித்ரவதை செய்தும் வந்துள்ளனர்.

இது அனைத்தையும் விட கொடுமையாக, தனது ஆண் நண்பர்களுடன் மனைவியை பழகுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். அப்படி தனது மனைவி செய்தால், தனது நண்பர்களின் மனைவியுடன் தனக்கு பழக முடியும் என அவர் நினைத்துள்ளார். இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு அவர் வெளிநாட்டுக்கு சென்ற நிலையில், தற்போது கொரோனா தொற்றின் காரணமாக, டிராவல் ஏஜென்சி கடும் நஷ்டத்தை எட்டிய நிலையில், தனது நகையை திருப்பி தருமாறு கணவரின் குடும்பத்தாரிடம் அந்த பெண் கேட்டுள்ளார். அதனை மீட்டுக் கொடுக்க மறுத்த பெண்ணின் கணவர் குடும்பத்தினர், அந்த பெண்ணை அடித்து உதைத்து வீட்டை விட்டு அனுப்பியுள்ளனர்.

இதன் காரணமாக, தனது கணவர் மீதும், கணவரின் குடும்பத்தார் மீதும் அந்த பெண் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக, போலீசாரை தற்போது விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்