'என் புள்ளைங்கள விட நான் தான் நெறைய சம்பாதிக்குறேன்...' 'பிரமிக்க வைக்கும் பாட்டியோட ஆனுவல் இன்கம்...' - பால் விற்று சாதனை...!
முகப்பு > செய்திகள் > இந்தியா62 வயது பாட்டி ஒருவர் பால் விற்று கடந்த ஆண்டு மட்டும் 1.10 கோடி ரூபாய்க்கு பால் விற்று சாதனை படைத்த சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது.
குஜராத் மாநிலம், பனஸ்கந்தா மாவட்டத்தில் நாகனா கிராமத்தைச் சேர்ந்த 62 வயது நவல்பென் என்னும் பாட்டி அப்பகுதி மக்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக, ஒரு சிறு புரட்சியையே நடத்தி வருகிறார்.
பால் பண்ணை வைத்து தொழில் செய்துவரும் பாட்டி கடந்த 2020-ஆம் ஆண்டில் மட்டும் ரூ 1.10 கோடி மதிப்புக்கு பாலை விற்று, ஒவ்வொரு மாதமும் ரூ 3.50 லட்சம் லாபம் ஈட்டியதன் மூலம் அவர் அனைவரும் வியக்கத்தக்க சாதனை படைத்துள்ளார். 2019 ஆம் ஆண்டில் அவர் ரூ 87.95 லட்சம் மதிப்புள்ள பாலை விற்பனை செய்திருந்த நிலையில் இந்த ஆண்டு ஒரு கோடியை தாண்டியுள்ளார்.
சுமார் 80-க்கும் மேற்பட்ட எருமைகளும் 45 பசு மாடுகளை வைத்து அவைகளிலிருந்து வரும் பாலை பல கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு கொண்டு செய்து வருகிறார்.
இதுகுறித்து கூறிய நவல்பென் பாட்டி, 'இந்த பால் பண்ணை நடத்துவது என் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் வேலை. எனது 4 பிள்ளைகள் நகரங்களில் படித்து வேலை செய்து வருகின்றனர். ஆனால் அவர்கள் என்னைவிட குறைவாகவே சம்பாதிக்கின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டில், ரூ 87.95 லட்சம் மதிப்புள்ள பாலை விற்று பனஸ்கந்தா மாவட்டத்தில் முதல் இடத்தில் இருந்தேன். 2020-ஆம் ஆண்டில் ரூ 1 கோடி 10 லட்சம் மதிப்புள்ள பாலை விற்பனை செய்வதன் மூலம் இந்த ஆண்டும் முதலிடத்தில் இருக்கிறேன்' என பூரித்து பேசியுள்ளார்.
மேலும் பாட்டியின் பால் விற்பனை சாதனை பனஸ்கந்தா மாவட்டத்தில் இரண்டு லட்சுமி விருதுகள் மற்றும் மூன்று சிறந்த பசுபாலக் விருதுகளை வென்றுள்ளது.
மற்ற செய்திகள்