MKS Others

ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள 'ஸ்மார்ட் போன்' பரிசு...! நீங்க செய்ய வேண்டியது 'அது' மட்டும் தான்...! - அதிரடி 'அறிவிப்பினால்' குவியும் மக்கள்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கடந்த 2019ஆம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்றளவும் பரவலாக அனைத்து மாநிலங்களிலும் கண்டறியப்பட்டு வருகிறது. அதோடு கொரோனா வைரஸ் உருமாறி உருமாறி டெல்டா போன்றும், தற்போது பரவி வரும் ஒமிகிரான் போன்றும் அதி வேகமாக பரவி வருகிறது.

ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள 'ஸ்மார்ட் போன்' பரிசு...! நீங்க செய்ய வேண்டியது 'அது' மட்டும் தான்...! - அதிரடி 'அறிவிப்பினால்' குவியும் மக்கள்...!

இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட்டின் கோவி ஷீல்டு, பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதோடு ரஷ்யாவின் ஸ்புட்னிக், ஆக்ஸ்ஃபோர்டு ஆஸ்ட்ரா ஜெனகா போன்றவை குறைந்த எண்ணிக்கையில் பயன்படுத்தப்படுகின்றன

பல உலக நாடுகள் மக்களுக்கு பல வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் சிலர் அதை சட்டைக்கூட செய்வதில்லை. இந்தியாவின் பல மாநிலங்கள் இதுவரை 50% கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என அறிவிக்க முடியாத நிலையில் தான் உள்ளது.

மத்திய அரசு அளித்த தகவல்படி சுமார் 45 கோடிப் பேர் மட்டுமே 2 டோஸ்களை செலுத்தியுள்ளதாகவும், சுமார் 90 கோடி பேர் முதல் டோஸை செலுத்தியிருப்பதாக கூறப்படுகிறது

அதோடு தற்போது புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுகொள்வது கட்டாயம் எனவும், தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களில் நடமாட கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் ஒரு அதிர்ஷ்டசாலிக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் போன் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.

இந்த அறிவிப்பை ராஜ்கோட் நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதோடு, டிசம்பர் 4 முதல், டிசம்பர் 10-ம் தேதி வரை நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் பங்கேற்போர், இந்த போட்டிக்கு தகுதியானவர்கள் எனவும், இவர்களில் இருந்தே செல்போன் யாருக்கு என தேர்ந்தெடுக்கப்படுவர் என அறிவித்துள்ளது.

அதோடு, இந்த அறிவிப்பு அப்பகுதி மக்களிடையே ஆர்வத்தை தூண்டியதால், மற்ற மாவட்ட, நகராட்சி நிர்வாகங்களும் இதுபோன்ற அறிவிப்பை வெளியிடலாமா என்று ஆலோசித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

GUJARAT, CORONA VACCINE

மற்ற செய்திகள்