"அப்பாவும் நான் தான்... அம்மாவும் நான் தான்..." திருநங்கை மருத்துவரின் வினோத 'ஆசை'... அதுக்காக அவங்க செய்யப் போற 'காரியம்'!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுஜராத் மாநிலத்தின் முதல் திருநங்கை மருத்துவரான ஜெஸ்நூர் தயாரா (Jesnoor Dayara) என்பவர், வருங்காலத்தில் ஒரு குழந்தையை பெற்றெடுத்து, அதற்கு தாயாக இருக்கவும் ஆசைப்பட்டுள்ளார்.
ஜெஸ்நூர் ஆணாக பிறந்த நிலையில், தன்னுடைய இளமை காலங்களில் அவருக்குள் பெண்ணிற்கான குணங்கள் இருந்ததைக் கண்டுள்ளார். தனது தாய் மற்றும் சகோதரியைப் போல, யாருக்கும் தெரியாமல் புடவை அணிந்தும், லிப் ஸ்டிக் போட்டுக் கொண்டும் பெண் தன்மையை அவ்வப்போது பார்த்துள்ளார். மேலும், தனக்குள் இருக்கும் மாற்றங்கள் குறித்து வெளியே யாரிடமும் பகிராமல் வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தனது மருத்துவ படிப்புக்காக ஜெஸ்நூர், ரஷ்ய பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அப்போது தனக்குள் இருந்த உள்ளுணர்வை அடக்கி வைத்துக் கொள்ளாமல், அனைத்தையும் உடைத்து எறிந்து தன்னுடைய விருப்பத்திற்கு இருந்துள்ளார். மேலும், தனக்கு தோன்றியதை போல வாழ அவர் முடிவு செய்த நிலையில், அதற்காக குடும்பத்தினரின் ஆதரவையும் அவர் பெற்றுள்ளார்.
தற்போது, இந்தியாவில் தனது மருத்துவ பயிற்சியைத் தொடங்குவதற்கான நேர்முக தேர்வை ஜெஸ்நூர் எழுதவுள்ள நிலையில், இந்தாண்டின் பிற்பகுதியில் பாலியல் மாற்று சிகிச்சைக்கு தன்னை உட்படுத்தவுள்ளார். வருங்காலத்தில் தாய்மையடைய விரும்பும் ஜெஸ்நூர், தனது விந்தணுவை கருத்தரிப்பு மையம் ஒன்றில் பாதுகாத்து வைத்துள்ளார்.
பாலியல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் தனது விந்தணுவை வாடகைத் தாய் மூலம் பெற்றெடுக்கவும் ஜெஸ்நூர் திட்டமிட்டுள்ளார். இது மருத்துவ அளவில் சாத்தியமானதாகும். 'அனைத்து கட்டுப்பாடுகளில் இருந்தும் என்னை விடுவித்து ஒரு பெண்ணாக வாழ முடிவு செய்தேன். ஒரு பெண்ணாக இருக்க, காளி தேவி எனக்கு பலம் அளித்துள்ளார். பெண் என்பவள், ஒரு தந்தையாக, தாயாக, நண்பராகவும் இருக்க முடியும். கருப்பை மட்டுமே தாயை உருவாக்கி விடாது. ஒரு அன்பான இதயம் தான் தாயை உருவாக்குகிறது.
எனது வருங்கால குழந்தைக்கு ஒரு தாயாக நான் மாற திட்டமிட்டதன் மூலம், எனக்கும் என்னை போன்று இருப்பவர்களுக்கும் ஒரு புதிய அத்தியாயத்தை எழுத நான் முடிவு செய்துள்ளேன்' என ஜெஸ்நூர் மிகவும் துணிச்சலுடன் தெரிவித்துள்ளார்.
ஜெஸ்நூரின் முடிவு குறித்து அவரது விந்தணுவை பாதுகாத்து வைத்துள்ள கருத்தரிப்பு மையத்தின் மருத்துவர் நயனா படேல் என்பவர் கூறுகையில், 'எதிர்காலத்தில் தாய்மையடைய வேண்டி, திருநங்கை ஒருவர், விந்தணுவை பாதுகாத்து வைக்க எங்களை அணுகியது இதுவே முதல் முறை' என தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்