எப்படியாவது அமெரிக்கா போய்டணும்.. அவசரப்பட்டு அரசு வேலையை விட்ட தம்பதி.. கடைசி நேரத்துல நடந்த டிவிஸ்ட்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாசட்ட விரோதமாக அமெரிக்காவுக்கு செல்ல முயன்ற தம்பதியை அதிகாரிகள் கைது செய்த சம்பவம் குஜராத் மாநிலம் முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
![எப்படியாவது அமெரிக்கா போய்டணும்.. அவசரப்பட்டு அரசு வேலையை விட்ட தம்பதி.. கடைசி நேரத்துல நடந்த டிவிஸ்ட்..! எப்படியாவது அமெரிக்கா போய்டணும்.. அவசரப்பட்டு அரசு வேலையை விட்ட தம்பதி.. கடைசி நேரத்துல நடந்த டிவிஸ்ட்..!](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/gujarat-couple-tries-to-enter-us-illegally-arrested-at-the-airport-thum.png)
Also Read | "அங்க என்னமோ இருக்கு".. மலையில் சுற்றுலா சென்றவர்கள் பார்த்த காட்சி.. வெளிச்சத்துக்கு வந்த 30 வருஷ மர்மம்..!
அமெரிக்கா
குஜராத் மாநிலத்தின் கேடா மாவட்டத்தில் உள்ள மஹுதா தாலுகாவின் சிங்காலி கிராமத்தைச் சேர்ந்தவர் 32 வயதான ஹிதேஷ் படேல். இவருடைய மனைவி பினால் (வயது 30). ஹிதேஷ் அக்ரி துறையிலும் அவரது மனைவி அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராகவும் பணிபுரிந்து வந்திருக்கின்றனர். ஹிதேஷின் சகோதரி ஒருவர் திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆகியிருக்கிறார். அங்கே தனது சகோதரியின் கணவர் நல்ல சம்பளம் வாங்குவதை அறிந்த ஹிதேஷ், தாமும் அமெரிக்கா செல்லவேண்டும் என முடிவெடுத்திருக்கிறார்.
இந்நிலையில், அதற்கான முயற்சியில் அவர் இறங்கியுள்ளார். ஆனால், அவர்களுக்கு தடையாக இருந்தது அவர்களுடைய பாஸ்போர்ட் தான். ஏனென்றால் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த தம்பதியினர் போலி பாஸ்போர்ட் மூலமாக அயர்லாந்து சென்றிருக்கிறார்கள். ஆனால், நான்காம் நாளிலேயே அதனை கண்டுபிடித்த அந்நாட்டு அதிகாரிகள் இருவரையும் இந்தியாவிற்கு அனுப்பியிருக்கிறார்கள். அப்போது, இருவரின் பாஸ்போர்ட்டிலும் நாடுகடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஒரு கோடி ரூபாய்
இதனால், போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் நபர் ஒருவர் மூலமாக உதவியை நாடியிருக்கிறார்கள் இந்த தம்பதியினர். இதற்காக ஒருகோடி ரூபாய் வரை செலவும் செய்திருக்கிறார் ஹிதேஷ். பாஸ்போர்ட்டில் இருந்த பக்கங்களை அந்த கும்பல் மாற்றிக்கொடுத்திருக்கிறது. இதன்மூலம் துபாய் - மெக்சிகோ வழியாக அமெரிக்கா செல்ல முடிவெடுத்திருக்கிறார்கள் இருவரும். ஆனால், குஜராத்தின் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்த அதிகாரிகள் இந்த தம்பதியினரை பரிசோதித்ததில் அவர்களுக்கு உண்மை தெரியவந்திருக்கிறது.
போலியான பயண ஆவணங்கள் மூலமாக துபாய்க்கு செல்ல முயற்சித்த வழக்கில் இருவரையும் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இதனால் விமான நிலையமே பரபரப்புடன் காணப்பட்டது.
Also Read | கிளம்புன இடத்துக்கே திரும்புன விமானம்.. தரையிறங்குன அப்பறம் தான் விபரமே தெரியவந்திருக்கு..!
மற்ற செய்திகள்