ஒண்ணா சேர முடியாதுல்ல".. காதல் ஜோடி எடுத்த சோக முடிவு... சிலைகளுக்கு திருமணம் நடத்தி கண்ணீர் விட்ட குடும்பத்தினர்.!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குஜராத் மாநிலம், தாபி என்னும் பகுதியை சேர்ந்தவர் கணேஷ். அதே பகுதியை சேர்ந்தவர் ரஞ்சனா. இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஒண்ணா சேர முடியாதுல்ல".. காதல் ஜோடி எடுத்த சோக முடிவு... சிலைகளுக்கு திருமணம் நடத்தி கண்ணீர் விட்ட குடும்பத்தினர்.!

Also Read | "இது எப்படிங்க அவுட்டு?".. சர்ச்சையை கிளப்பிய ஹர்திக் பாண்டியா விக்கெட்.. கொதித்தெழுந்த கிரிக்கெட் பிரபலங்கள்!!

ஆனால், கணேஷ் மற்றும் ரஞ்சனா ஆகிய இருவரின் வீட்டிலும் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளதாக தெரிகிறது. இதன் பெயரில் பெரிய அளவில் வாக்குவாதம் மற்றும் சண்டைகளும் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

காதலித்த தங்களால் சேர்வதற்கு முடியாமல் இருந்ததால் கணேஷ் மற்றும் ரஞ்சனா ஆகிய இருவரும் கடும் மன வேதனையில் இருந்ததாக தெரிகிறது. இதனால் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துக் கொள்ளவும் அவர்கள் இருவரும் முடிவு செய்துள்ளனர். அதன்படி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கணேஷ் மற்றும் ரஞ்சனா ஆகிய இருவரும் இணைந்து உயிரையும் மாய்த்துக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றது.

அப்படி இருக்கையில், இந்த காதல் ஜோடி உயிரிழந்து சுமார் ஆறு மாதங்களான நிலையில், அவர்கள் சேர்ந்து வாழ முடியாமல் போனதற்கு தாங்கள் தான் காரணம் என்றும் அவர்களின் குடும்பத்தினர் மனம் வருந்தி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

Gujarat couple statues marriage after they passed away

இந்த நிலையில், கணேஷ் மற்றும் ரஞ்சனா ஆகியோர் சேராமல் போனதை எண்ணி புதிதாக ஒரு விஷயத்தை குடும்பத்தினர் யோசித்துள்ளனர். அதன்படி, கணேஷ் மற்றும் ரஞ்சனா ஆகியோரின் சிலையை வைத்து அவற்றிற்கு முறைப்படி குடும்பத்தினர் சேர்ந்து திருமணம் செய்து வைத்துள்ளனர். உயிரிழந்த காதலர்களின் ஆன்மா சாந்தி அடைவதற்காகவும், அவர்களின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு இதனை செய்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து உயிரிழந்த ரஞ்சனாவின் தாத்தா ஒருவர் பேசுகையில், கணேஷ் தங்களின் தூரத்து உறவினர் தான் என்றும் அதன் காரணமாக திருமணத்திற்கு அவர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் கூறி உள்ளார். அவர்கள் இருவரும் மிக அதிகமாக ஒருவரை நேசித்து வந்ததால் இரண்டு குடும்பங்களும் சேர்ந்து இந்த ஆலோசனையை கையில் எடுத்து செயல்படுத்தியதாகவும் மேலும் அவர் கூறி உள்ளார்.

Also Read | படிச்சது MA .. பிரிட்டிஷ் கவுன்சிலில் வேலை.. எல்லாத்தையும் உதறித் தள்ளிவிட்டு ரோட்டுக்கடை தொடங்கிய பெண்.. நெகிழ வைக்கும் காரணம்!

GUJARAT, COUPLE, COUPLE STATUES, COUPLE STATUES MARRIAGE

மற்ற செய்திகள்