'அவ உடம்புல பேய் இருக்குப்பா...' 'விதவிதமான டார்ச்சர்கள்...' 'கணவன் மனைவியை பிரித்த மாமியார்...' - மாமியார் எதிரிலே மாமனார் செய்த கொடுமைகள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுஜராத்தில் புதிதாக திருமணமான மணப்பெண்ணின் உடம்பில் பேய் உள்ளதாக கூறி தாம்பத்ய வாழ்வில் ஈடுபடவிடாமல் தடுத்த கணவரின் வீட்டார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குஜராத்தில் வதோதரா பகுதி காந்திநகரில் வசிக்கும் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது கணவருக்கு 2020-ம் ஆண்டு கடந்த பிப்ரவரி மாதம் திருமணமாகி உள்ளது. காந்தி நகரை சேர்ந்த புதுமண தம்பதிகள் தங்கள் இல்வாழ்வை ஆரம்பிக்கும் போது குடும்பத்தில் பல பிரச்சனைகள் தொடங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணுடைய கணவரின் பெற்றோர்கள் தன் மருமகளின் உடம்பில் பேய் உள்ளதாக கூறத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக மாமியார் மற்றும் மாமனார் சேர்ந்து அவரை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்த ஆரம்பித்துள்ளனர்.
மேலும் தன் மகனுடன் உடலுறவு கொண்டால் அந்த பேய் தன் மகனின் உடலிலும் ஏறி விடும் எனக்கூறி கணவன் மனைவி இருவரையும் பிரித்து வைத்துள்ளனர். மேலும் தன் மாமியார் மற்றும் மாமனார் இணைந்து தன் கணவரை தூண்டிவிட்டு, தங்களுக்குள் பிரச்சனைகளையும் உருவாக்கி வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போது அவர் காந்திநகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், "என் உடம்பில் 'பேய்' இருப்பதாக மாமியார் மற்றும் மாமனார் நம்புகிறார்கள். மேலும், என் கணவருடன் உடலுறவு கொண்டால், ஆவி தனது கணவரின் உடலில் நுழையும் என கூறுகிறார்கள். மேலும் அவர்களுக்கு எதிராக நான் பேசும்போதெல்லாம் என் நடத்தையை குறைகூறி, என் மாமியார் மற்றும் கணவனால் நான் மனரீதியாக துன்புறுத்தப்பட்டேன், என் மாமியார் நான் வீட்டில் தனியாக இருக்கும் போதெல்லாம், என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துமாறு என் மாமனாரை தூண்டிவிடுவார். இதை என் கணவரிடம் சொல்ல முயன்றால் அவர் என்னை நம்ப மாட்டார். ஒரு கட்டத்தில் மார்ச் 10 அன்று என் கணவரே என்னை வீட்டை விட்டு வெளியேற்றினார்.
மேலும் என் குடும்பத்தார் என்னுடைய கணவர் வீட்டாரிடம் சமரசம் பேச முயற்சித்தனர் ஆனால் என் மாமியார் என்னை அனுமதிக்க மறுத்துவிட்டார்" என்று தனது எஃப்.ஐ.ஆரில் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இதையெல்லாம் வெளியே சொல்லி காவல்துறையினரை அணுகினால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும் என மாமியார் அச்சுறுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மற்ற செய்திகள்