'திருமணத்துக்கு முன்'.. 'பெண்கள் இத செஞ்சா 2 லட்சம் ரூபாய் அபராதம்'.. வெடிக்கும் சர்ச்சை!
முகப்பு > செய்திகள் > இந்தியாமனித வாழ்க்கையில் இரண்டற கலந்து உயிருடலாய் ஆன பின்பு செல்போனையும் மனிதனையும் பிரிக்க முடியாத சூழல் வந்துவிட்டது.
அவரவர் விருப்பத்துக்கேற்ப வெவ்வேறு வகையான செல்போன்களையும், வெவ்வேறு வகையான ஆபரேட்டிங் சிஸ்டம் கொண்ட மென்பொருள் இன்ஸ்டால் செய்யப்பட்ட போன்களையும் மனிதர்கள் பயன்படுத்துகின்றனர். இந்தியாவைப் பொருத்தவரை கடந்த ஐந்தாண்டுகளில் டிஜிட்டல் தொழில்நுப்டம் அடுத்த நகர்வுகளைக் கண்டிருக்கிறது.
2G அலைவரிசை போய், 4G, 5G என்று மக்கள் இணையதளத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் குஜராத்தில் தகூர் என்கிற பெரும்பான்மை சமூக மக்கள் தங்களது சமூகத்தைச் சேர்ந்த பெண்களுள் திருமணமாகாத பெண்கள் கண்டிப்பாக செல்போன்களை பயன்படுத்தக் கூடாது மற்றும் சாதிமாறி திருமணம் செய்யக் கூடாது என்பன போன்ற கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளனர்.
குஜராத்தின் வடக்கு மாகாணமான பனஸ்கந்தா மாவட்டத்தில் இருக்கும் 10க்கும் மேற்பட்ட கிராம மக்களிடையே அமல்படுத்தப்பட்டுள்ள இந்த விதிமுறைகளை மீறினால் 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் இந்த சமூக மக்களிடையே நிகழ்ந்த பொதுக்கூட்டத்தில் பரப்புரை செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.