"எலான் மஸ்க்காய நமஹ".. பூஜை போட்ட ஆண்கள் சங்கம்.. அவங்க சொன்ன காரணம் இருக்கே.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உலக பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க்கிற்கு பெங்களூருவை சேர்ந்த சில ஆண்கள் பூஜை நடத்தும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு அவர்கள் சொல்லியிருக்கும் காரணம் பலரையும் திகைப்படைய செய்துள்ளது.

"எலான் மஸ்க்காய நமஹ".. பூஜை போட்ட ஆண்கள் சங்கம்.. அவங்க சொன்ன காரணம் இருக்கே.. வைரலாகும் வீடியோ..!

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | "என் மகன் விட்டுச்சென்ற பணிகளை தொடர்வேன்".. ஈரோடு கிழக்கு தொகுதியில் தொடர்ந்து முன்னிலை.. EVKS இளங்கோவன் உருக்கம்.!

அமெரிக்காவில் வசித்துவரும் சேர்ந்த எலான் மஸ்க் 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். முன்னதாக 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க மஸ்க் விருப்பம் தெரிவித்திருந்தார்.

ஆனால், போலி கணக்குகள் பற்றி தகவல்களை ட்விட்டர் நிறுவனம் வெளியிடவில்லை எனக்கூறி நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிடுவதாக அறிவித்தார் மஸ்க். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்திற்கு செல்ல இருப்பதாக ட்விட்டர் நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த சூழலில் ட்விட்டரை கைப்பற்றி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார் மஸ்க். இதனிடையே, வாசனை திரவிய தொழிலும் அவர் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Group Of Men Organise Puja For Elon Musk In Bengaluru

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த சில ஆண்கள் எலான் மஸ்க்கின் புகைப்படத்திற்கு பூஜை செய்யும் வீடியோ வெளியாகி சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றன. இதில், ஒருவர் மஸ்க்கின் புகைப்படத்திற்கு ஊதுபத்தி காட்ட, பின்னணியில் 'எலான் மஸ்க்காய நமஹ' என முழக்கமிடுகிறார்கள். அப்போது, மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதால் ஆண்களால் அடக்குமுறைக்கு எதிராக சுதந்திரமாக கருத்துக்களை தெரிவிக்க முடிவதாகவும் இந்த ஆண்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Group Of Men Organise Puja For Elon Musk In Bengaluru

Images are subject to © copyright to their respective owners.

முன்னதாக எலான் மஸ்க் பேச்சு சுதந்திரத்தை மக்களுக்கு வழங்க ட்விட்டர் உறுதுணையாக இருக்கும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் மஸ்க் அதனை நிறைவேற்றியிருப்பதாகவும் இந்த வீடியோ பதிவில் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். இதனிடையே இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Also Read | கடலலையில் தெரிந்த பெண்ணின் முகம்?.. 12 மணி நேரம் காத்திருந்த போட்டோகிராஃபருக்கு சர்ப்ரைஸ்.. வைரல் Pic..!

BENGALURU, ELON MUSK

மற்ற செய்திகள்