"பேண்ட் வாத்தியத்துக்கு யார் காசு கொடுக்குறது?".. கோவத்துல மாப்பிள்ளை செஞ்ச காரியம்.. சோகத்தில் முடிந்த திருமணம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திர பிரதேசத்தில் பேண்ட் வாத்தியத்திற்கு யார் பணம் கொடுப்பது என்ற தகராறில் திருமணமே நின்றுபோனது பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
Also Read | அப்படிப்போடு... 11 ஆம் வகுப்பில் பாடப்பிரிவு ஒதுக்கீடு.. பள்ளிக்கல்வித் துறை போட்ட அதிரடி உத்தரவு..!
பலருக்கும் தங்களது திருமணங்கள் பற்றிய பல விதமான கனவுகள் இருக்கும். திருமணத்தில் அணிய இருக்கும் உடைகள் துவங்கி பரிமாறப்படும் விருந்து உணவுகள் வரையில் பலரும் முன்கூட்டியே தீர்மானித்துவிடுவர். வாழ்வின் முக்கிய தருணமாக திருமணத்தை பலரும் கருதுவதால் அதற்காக ஏராளமாக செலவழிக்கவும் தயாராகவும் இருக்கிறார்கள். இதனாலேயே உலகில் திருமணங்களில் அதிகம் செலவு செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கிறது. அப்படி திருமணங்களில் இசை கச்சேரிகள் மற்றும் பேண்ட் வாத்தியங்கள் இடம் பெறுவதையும் தங்களது கவுரவத்தை வெளிப்படுத்தும் செயலாக பார்க்கின்றனர் மக்கள். இந்நிலையில் உத்திர பிரதேசத்தில் பேண்ட் வாத்தியத்தால் ஒரு திருமணமே நின்று போயிருக்கிறது.
திருமணம்
உத்திரப் பிரதேசம் சஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள மிர்சாபூரில் தர்மேந்திரா என்ற இளைஞருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. தனது திருமணத்திற்காக ஃபரூக்காபாத்தில் இருந்து மிர்சாபூருக்கு பேண்ட் வாத்தியங்களை அழைத்து வந்துள்ளார் கல்யாண மாப்பிள்ளையான தர்மேந்திரா. இந்நிலையில், திருமண சடங்குகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், பணம் கொடுக்குமாறு தர்மேந்திராவிடம் பேண்ட் வாத்திய குழுவினர் கேட்டிருக்கின்றனர்.
அதற்கு, பெண் வீட்டாரிடம் பணம் பெற்றுக்கொள்ளும்படி மாப்பிள்ளை வீட்டார் கூறியிருக்கிறார்கள். ஆனால், பேண்ட் வாத்திய குழுவினருக்கு பணம் கொடுக்க பெண் வீட்டாரும் மறுத்துவிட்டார்கள். தாங்கள் பேண்ட் வாத்தியத்தை அழைத்துவரவில்லை எனவும் அதனால் தங்களால் பணம் கொடுக்க முடியாது எனவும் பெண் வீட்டார் கூறவே, இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
வாக்குவாதம்
பேண்ட் வாத்திய குழுவிற்கு யார் பணம் கொடுப்பது? என மாப்பிள்ளை வீட்டாரும், மணமகள் வீட்டாரும் தகராறில் ஈடுபட, திருமண வீடே களேபரமாகியிருக்கிறது. பெண் வீட்டார் பணம் கொடுக்க மறுத்துவிட்டதால் கோபமடைந்த கல்யாண மாப்பிள்ளை தர்மேந்திரா கல்யாண மேடையில் இருந்து எழுந்து வெளியேறியிருக்கிறார். மேலும், தான் அணிந்திருந்த நெக்லஸை தர்மேந்திரா உடைத்தெறிந்துவிட்டு சென்றிருக்கிறார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு, மணமகள் வீட்டாரும், மாப்பிளை குடும்பத்துடனான உறவை துண்டித்துக்கொண்டனர். பேண்ட் வாத்தியங்களுக்கு யார் பணம் கொடுப்பது என மாப்பிள்ளை - பெண் வீட்டாரிடையே நடைபெற்ற தகராறில் திருமணமே நின்றுபோனது உத்திர பிரதேசம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்