VIDEO: இப்போ சந்தோசம் தானே பாட்டி...? 'நெனச்சத நடத்திக் காட்டிய பேத்தி...' - நெகிழ வைக்கும் வைரல் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாட்டி ஒருவருக்கு தனது பேத்தியின் திருமணத்தை காண வாய்ப்பு பெற்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Methodist Healthcare System தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர். அவிஸ் ரஸ்ஸல் என்ற பாட்டிக்கு கேன்சர் நோய் பாதித்துள்ளது. இதன் காரணமாக, சில நாட்களுக்கு முன் கடுமையான உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதற்கு முன்பாக, அவரது பேத்திக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது, ஆனால் தன்னுடைய அன்பு பாட்டியின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் திருமணம் நடக்கவிருந்த தேதியில் இருந்து தள்ளி வைத்துள்ளார்.
பாட்டிக்கு உடல்நலத்தில் எந்தவித முன்னேற்றம் ஏற்படாமல் நாளுக்குநாள் பாதிப்பு அதிகரித்து வந்துள்ளது. அவரது பேத்தி, சீன், பள்ளிப் பருவத்தில் இருந்தே காதலித்து வந்த காதலரை தான் திருமணம் செய்ய முடிவெடுத்து இருந்தார்.
நாளுக்கு நாள் பாட்டியின் நிலை மிகவும் மோசமடைவதால் சீன் பாட்டி வாழ்கிற போதே அவரது கண் முன்னால் தன்னுடைய திருமணம் நடக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். ஆயினும், பாட்டி தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருப்பதால் அதற்கு பல தடைகள் இருந்தது. மருத்துவமனையில் அப்படிப்பட்ட நிகழ்வு எதற்கும் அனுமதி தர முடியாது என்று மறுத்து விட்டனர்.
ஆனால், பாட்டி தன்னுடைய திருமணத்தை பார்க்க வேண்டும் என கெஞ்சி மருத்துவமனையில் அனுமதியை வாங்கியுள்ளார். அனைவரும் வியந்துப் போகும் வண்ணம், சீன் தனது திருமணத்தை மெதடிஸ்ட் மருத்துவமனையில் தனது அன்பு காதலனை பாட்டியின் முன் வைத்து திருமணம் செய்துக் கொண்டார்.
பேத்தியின் திருமணம் செய்து கொள்வதைக் கண்டபோது அந்த பாட்டி நெகிழ்ந்து போனார். அவிஸ் தன்னுடைய கடைசி காலத்தில் இந்த பூமியில் தனது பேத்தி திருமணத்தை கொண்டாடியபடி கழித்தார் என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளனர்.
திருமணத்தில் மணமகன், மணமகள், பாட்டி உட்பட மொத்தம் நான்கே நான்கு பேர் தான் இருந்தனர். பாட்டி முன்னிலையில் திருமண மோதிரத்தை மாற்றிக்கொள்ளும் தம்பதிகள் திருமணம் நிறைவடைந்த பின்னர் பாட்டியை ஆரத்தழுவி ஆசிர்வாதத்தை பெறுகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அனைவரிடையும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்