செப்டம்பர் மாசம் 'தடுப்பூசி' கெடைக்கும்... அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாடு... அவங்ககிட்ட இருந்து 'நம்ம' வாங்கலாமா?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா தடுப்பூசி செப்டம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என ரஷ்யா அறிவித்துள்ளது. அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் இதுகுறித்து வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார். இதனால் உலகின் முதல் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்த நாடு என்ற பெருமை அந்த நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் மாசம் 'தடுப்பூசி' கெடைக்கும்... அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாடு... அவங்ககிட்ட இருந்து 'நம்ம' வாங்கலாமா?

இந்த நிலையில் ரஷ்யாவிடம் இருந்து கொரோனா தடுப்பூசியை வாங்கலாமா? என மத்திய அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை, ''ரஷ்யாவில் இருந்து கொரோனாவுக்கான தடுப்பூசி பெறுவது குறித்து மத்திய அரசு அமைத்த தேசிய நிபுணர் குழு நாளை ஆலோசனை நடத்த உள்ளதாகவும், மாநில அரசுகள், தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் தேசிய நிபுணர் குழு தொடர்பில் இருக்கும் எனவும், இது தொடர்பாக தேசிய நிபுணர் குழு நாளை கூடி ஆலோசித்து முடிவு எடுக்கும்,'' என தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்