அடுத்தடுத்து தீப்பிடிக்கும் E-bike.. ‘அதை செக் பண்ணியே ஆகணும்’.. மத்திய அரசு எடுத்து அதிரடி முடிவு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

எலெக்ட்ரிக் பைக்குகள் தீப்பிடித்து எரிவது தொடர் கதையாகியுள்ள நிலையில் மத்திய அரசு அதிரடி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்தடுத்து தீப்பிடிக்கும் E-bike.. ‘அதை செக் பண்ணியே ஆகணும்’.. மத்திய அரசு எடுத்து அதிரடி முடிவு..!

Also Read | Dating App-ல் கேரள பெண்ணுக்கு காதல் வலை.. டெல்லியில் சிக்கிய நைஜீரியா இளைஞர்.. அடுத்து வெளியவந்த அதிர்ச்சி தகவல்..!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக பேட்டரியில் இயங்கும் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்தது. அதனால் பல நிறுவனங்கள் இந்தியாவில் எலெக்ட்ரிக் பைக்குகள் விற்பனையை தொடங்கியுள்ளன.

இந்த சூழலில், எலெக்ட்ரிக் பைக்குகள் திடீரென தீப்பற்றி எரிவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் எலெக்ட்ரிக் பைக்குகள் தீப்பிடித்து எரிந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. சமீபத்தில் வேலூர் அருகே எலெக்ட்ரிக் பைக் தீப்பிடித்த விபத்தில் அப்பா, மகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த எலெக்ட்ரிக் பைக்குகளில் லித்தியம் அயன் பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதனால் இந்த பேட்டரிகள் தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளை பரிசோதனை செய்யும் முறையில் மாற்றங்களை கொண்டு வரவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read | Laptop-ல் வேலை பார்த்துக் கொண்டிருந்த IT இளம்பெண்.. திடீரென கேட்ட அலறல் சத்தம்.. Work from home-ல் நடந்த அதிர்ச்சி..!

ELECTRIC TWO-WHEELER, EV BATTERY, E-BIKES, எலெக்ட்ரிக் பைக்

மற்ற செய்திகள்