'இந்தியாவில் எல்லோருக்கும் தடுப்பூசியா???'... 'அரசு அப்படி சொல்லவே இல்லையே?!!'... 'சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளியாக வெளியான முக்கிய தகவல்!!!"...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வேண்டியதில்லை என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

'இந்தியாவில் எல்லோருக்கும் தடுப்பூசியா???'... 'அரசு அப்படி சொல்லவே இல்லையே?!!'... 'சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளியாக வெளியான முக்கிய தகவல்!!!"...

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் கொரோனாவுக்கான தடுப்பூசி ஏறக்குறைய பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இந்நிலையில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுமா எனவும், அந்த தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுமா எனவும் பல கேள்விகள் எழுந்துள்ளது. இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண், "ஒட்டுமொத்த நாட்டுக்கும் தடுப்பூசி என்பதை அரசு ஒருபோதும் கூறவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். உண்மை தகவல்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட இத்தகைய விஞ்ஞான சிக்கல்களை நாங்கள் விவாதிப்பது முக்கியம். முழு நாட்டிற்கும் தடுப்பூசி போட எவ்வளவு நேரம் ஆகும் என்று சுகாதார செயலாளரிடம் கேட்கப்பட்டுள்ளது" எனக் கூறியுள்ளார்.

Govt Never Spoke About Vaccinating Entire Country Health Secretary

மேலும் இது பற்றி பேசியுள்ள ஐசிஎம்ஆர் பொது இயக்குனர் டாக்டர் பல்ராம் பர்கவா, "நம்முடைய நோக்கம் கொரோனா பரவுவதற்கான செயினை உடைப்பதாகும். முக்கியமான மக்களுக்கு தடுப்பூசி போடவும், வைரஸ் பரவலை உடைக்கவும் முடிந்தால், அப்புறம் நாம் ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி போட வேண்டியதிருக்காது. அது தடுப்பூசியின் திறன் எப்படி இருக்கிறது என்பதை சார்ந்தது" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்