மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க எப்படியும் வெற்றிபெற்றுவிடுவோம் என்று எதிர்பார்த்தது. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அமோக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தார். தேர்தல் வெற்றியை தொடர்ந்து கொல்கத்தாவில் வன்முறை வெடித்தது. இதில் ஏராளமான கடைகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இது குறித்து ஆளுநர், மம்தா பானர்ஜியைக் கடுமையாக விமர்சித்து, கடிதம் எழுதியிருந்தார்.
இதனையடுத்து, ஆளுநரைத் திரும்ப பெறும்படி மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடிக்கு மூன்று முறை கடிதம் எழுதினார். மம்தா பானர்ஜி முதல்வர் பொறுப்பேற்றது முதல் திரிணாமுல் காங்கிரசுக்கும் ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கு இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் மேற்கு வங்க அரசின் பல முக்கிய முடிவுகளுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுப்பதாக திரிணாமுல் விமர்சித்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக கடந்த டிசம்பர் 18ம் தேதி தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் ஆளுநர் தலைமையில் அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கலந்து கொள்ளும் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. துணை வேந்தர்கள் யாருமே அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால் கடும் அதிருப்தியடைந்த ஆளுநர் ஜக்தீப் தன்கர், ஆளும் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்தவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகவே துணை வேந்தர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என குற்றம்சாட்டினார்.
அமெரிக்கா அறிமுகம் செய்யும் புதிய விசா.. யாருக்கு சாதகம்.. நிறுவனங்கள் செம்ம ஹேப்பி
இதனையடுத்து, ஆளுநர் ஒத்துழைக்காவிட்டால் பல்கலைக்கழகங்களுக்கு முதல்வரையே வேந்தராக அறிவிப்போம் என்று மம்தா தலைமையிலான அரசு தெரிவித்தது. குடியரசு தினத்திற்கு அலங்கார ஊர்தியில் சுபாஷ் சந்திரபோஸ் அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்தது. இந்நிலையில், நேற்று நடந்த குடியரசு தின விழா கொண்டாட்டத்தின்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆளுநரை கண்டும் காணாமல் சென்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.
விழாவுக்கு வந்த மம்தாவுக்கு ஆளுநர் ஜக்தீப் தன்கர் வணக்கம் தெரிவித்தபோது அவரை ஏறடுத்தும் பார்க்காமல் வணக்கம் செலுத்தினார். அதன் பிறகு மம்தாவிடம் தன்கர் பவ்யமாக கைகளை காட்டி ஏதொ சொல்ல முயன்றார். அதனை சிறிதும் கண்டுகொள்ளாமல் சென்றார் மம்தா.
மற்ற செய்திகள்