'மேலும் 43 மொபைல் ஆப்களுக்கு இந்தியாவில் தடை’... ‘மத்திய அரசு அதிரடி நடவடிக்கை’...!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாடிக்டாக், பப்ஜி செயிலிகளுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட நிலையில் மேலும் 43 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை விதித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் காஷ்மீர் மாநிலம் லடாக் எல்லையில் இந்தியா, சீனா ராணுவத்திற்கிடையே ஏற்பட்ட மோதலின்போது 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தது உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்தியாவின் மீது சீனா சைபர் தாக்குதல் தொடுத்தது.
இதையடுத்து, சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, தேச நலன் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில், கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதி சீனாவைச் சேர்ந்த 59 மொபைல் செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
டிக்டாக், ஹலோ, யூசி பிரவுசர் உள்ளிட்ட செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, அடுத்தக்கட்டமாக செப்டம்பர் 2-ம் தேதி 118 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது மேலும் 43 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் கீழ் 43 மொபைல் ஆப்களை இந்தியாவில் பயனர்கள் அணுகுவதைத் தடுப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்